இயற்கை கற்று தந்த அறிவியல்

இறைவனிடம் கையேந்துங்கள் என்பார்கள்.
நான் இயற்கையிடம் கையேந்துங்கள் என்கிறேன்.
நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள்...

இயற்கையென்ற தாயிடம் இருந்தே உருவாகின்றன தொழிற்நுட்பங்கள்..
பண்புகள் கணக்கில்லாமல் திரட்டி உங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் இயற்கையைக் காணுங்கள்...

அத்தியாவசிய உணவிலிருந்து, ஆடம்பர கைபேசி வரை எல்லாம் சாத்தியமானது யாராலே!
இங்கு அழிந்து வரும் இயற்கையாலே!

இயற்கையின்றி அறிவியல் தனித்து இயங்கிடுமா?

அறிவியலை தோற்றிவித்தவர் யார்?
என்று உங்களால் சொல்ல முடியுமா?

அது இயற்கையில் இருந்து பிறந்தது..
ஆம. மனிதன் இயற்கையிடம் கற்ற அனுபவக் கல்விதான் அறிவியல்...
இயற்கையென்ற சோதனைக்கூடத்தில் இயற்கையே சொதனைப் பொருளாக, மனிதனென்ற இயற்கையே சோதனை செய்பவனாக அறிவியல் வித்தை மிக எளிமையானது...

அறிவியல் ஆக்கபூர்வமானதாக இருந்தது பண கலாச்சாரம் புகாத காலத்தில்.
இன்றோ அது ஒரு அரைகுறை ஏட்டுச்சுரக்காய்...
அறிவியலில் இன்றைய நோக்கம் வியாபாரம்...
இதனால், இயற்கையில் கற்ற அறிவியலால் இன்று முழுமையடைந்த இயற்கையான பொருளைத் தர இயலவில்லை...
நடைமுறையைக் கவனித்து சிந்தித்தால் உண்மை உங்களுக்கும் புலப்படும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (2-Oct-17, 7:19 pm)
பார்வை : 5794

மேலே