வர்ணங்கள்

வர்ணங்கள்
========================================ருத்ரா

அந்த மீன்கொத்திப்பறவை
கொள்ளை அழகு.
நீலமும் சிவப்புமாய்
ஹெலிகாப்டர் போல் செங்குத்தாய்
சிறகு படபட‌த்து தன்னை
நிலை நாட்டிக்கொள்கிறது.
மீனை குறிவைத்து
பாய்ந்து கொத்திக்கொள்ள‌
நீரின் மேல் செப்பிடு வித்தை புரிகிறது.
"தொபுகடீர்"
நீர்ப்படலம் கிழிகிறது.
வைரத்திவலைகளாய் நீர்ப்பிழம்பு
உருண்டு திரள்கிறது.
அந்தப்பறவை நின்ற இடத்தைப்பார்க்கிறேன்.
அந்த நீலச்சிவப்பின் துடிப்புகளில்
ஒரு தடிமனான புத்தகம் இருந்தது.
டார்வின் சொன்ன‌
"உயிர்களின் தோற்றம்" அது.
இரைதேடுவதும்
இரையாகுவதுமே
நம் நீளமான சங்கிலியின் கண்ணிகள்.
அந்த நீலச்சிவப்பு சிறகுகளும்
பச்சை நிற மீனும்
ஜனன மரணங்களின் வர்ணங்கள்.

=====================================================

எழுதியவர் : ருத்ரா (3-Oct-17, 10:43 pm)
Tanglish : varnangal
பார்வை : 139

மேலே