அவள் திக்கற்றப் பாவை
அவள் நேசிக்கின்றாள்
அவன் உணரவில்லை
அவள் சிரிக்கின்றாள்
அவன் மகிழவில்லை
அவள் உருகுகின்றாள்
அவன் உணரவில்லை
அவள் இசைக்கின்றாள்
அவன் ரசிக்கவில்லை
அவள் வீழுகின்றாள்
அவன் ஏந்தவில்லை
அவள் தவிக்கின்றாள்
அவன் தாங்கவில்லை
ஆள் அரவமற்ற பொட்டல் காட்டில்
அந்தம் தேடும் ஒற்றைக் குயிலாய்
சந்தம் கூட்டிப் கார்வையாய் பாடுகிறாள்
துங்கம் துலங்கும் திக்கற்றப் பாவை
கூடா மனதால் கூடிய மணவாழ்வு
நீரற்ற நிலமாகி வாடிய பயிராகும்
வேர் பற்றுகள் விட்டு விலகி
தார்பாலையாய் தரிசாகி வீழும்!
கவிதாயினி அமுதா பொற்கொடி