எப்பேர்ப்பட்ட கலைஞன் சிவாஜி
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருவுற சிலை செய்து மணிமண்டம் அமைத்து அரசு பெருமைப்படுத்தியுள்ளது. இதற்க்காக 2.8 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிவாஜி கணேசன் தலைசிறந்த நடிகர். நடிக்கும் போது தான் நடிக்கும் சுவடு கொஞ்சமும் தெரியாமல் நிஜமாகவே அந்த பாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொள்ளும் அற்புத கலைஞன். அந்த கதைக்குள் அந்த கதாபாத்திரத்துக்குள்ளாக பார்க்கும் ஒவ்வொரு கண்களையும் தனது இரும்பு குரலாலும் நடிப்பாலும் இழுத்துக்கொண்ட காந்த சக்தி சிவாஜி அவர்கள்.
சிவாஜி என்று சொன்னதும் அவர் சாய்ந்தாடு அம்மா சாய்ந்தாடு என்று உருகும் பாசமலரின் பாசமிகு அண்ணனாக தங்க பதக்கத்தில் தவறு செய்யும் மகனை கோபப்பார்வை பார்க்கும் ஒரு நேர்மையான காவர்கள்துறை தந்தையாக, கவுரவத்தையும் கர்வத்தையும் கண்ணாக கொண்ட கவுரவத்தின் வக்கீலாக, மறைந்திருந்து பார்க்கும் கள்வனாக (படம் பெயர் தெரியவில்லை சார்), மணிக்கணக்காக நாகேஷிடம் வசனம் பேசிய கோவில் காட்சியும், அகோர முகத்துடன் அன்புக்காக ஏங்கிய ஒரு கண்ணனாக ,மானம் கெட்டவனே என்னிடமே கேட்கிறாய் வரி என்று சீரிய கட்டபொம்மனாகவும், கோர்ட் கூண்டில் சீரிய வேலையில்லா பட்டதாரியாகவும் என எத்தனையோ கதாபாத்திரமாக நம் கண் முன் வந்து விடுகிறார் அந்த மாபெரும் கலைஞன் . அவர் நடித்து விட்டா போயிருக்கிறார் ஒவ்வொரு படங்களிலும் வாழ்ந்துவிட்டாலாவா போயிருக்கிறார்.
அவரை போன்ற நடிகன் இன்னமும் தமிழ் சினிமாவில் வரவில்லை. இனியும் வரப்போவதில்லை. வளர்ந்த நடிகர்களுக்கும் வளர விரும்பும் நடிகர்களுக்கும் திரைத்துறையில் கால் பாதிக்க நினைக்கும் அதனை இதயங்களுக்கும் சிவாஜின்கணேசனின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒரு பாடசாலையே . அவர் உயிர் கொடுத்து நடித்த ஒவ்வொரு காட்சிகளும் பாட புத்தகங்களே. சிவாஜி சிவாஜி தான் . நடிப்பு என்றால் சிவாஜி தான்!! இன்று அவர் இல்லாவிட்டாலும் அவர் படங்களின் பாத்திரங்கள் ஒவ்வொன்றிலும் அவர் நடிப்பு ஜீவனால் ஊற்றிய உயிர் வாழ்ந்து கொண்டே இருக்கும் காலங்கள் தோறும் நம் இதயங்களோடு இந்த இமயம் பேசிக்கொண்டே இருக்கும் .
அப்பேற்பட்ட சிவாஜி கணேசனின் பிறந்த நாளில் கலையுலகம் அரசியல் உலகம் இரண்டும் இணைந்து அவருக்கு சிலையும் மணிமண்டபமும் திறந்து வைத்து அந்த மாபெரும் கலைஞனை பெருமைப்படுத்தி உள்ளது. சிறுவயது பருவத்தில் அவரின் விழிஅசைவுகள், அவர் குரல் , அவர் முகபாவம் , உடல் அசைவு என அத்தனையும் சேர்த்து குழைத்து அவர் உயிர் கொடுத்த திரை பொம்மைகளை அன்றும் இன்றும் ஒரு குழந்தேயென ரசிக்கும் எனக்கும் உங்களுக்கும் அந்த சிலையை பார்க்கும் போது ஒரு பூரிப்பு வந்திருக்க கூடும்.
ஆனாலும் மனதில் சின்னதாய் ஒரு நெருடல் ஒட்டிக்கொள்கிறது. இந்த மரியாதையை செய்திருக்க வேண்டியது காலை உலகமா தமிழக அரசா. இதற்கு செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை நடிகர் சங்க கருவூலத்திலிருந்து சென்று இருந்தாலோ சக நடிகர்களின் பாக்கெட்டிலிருந்தோ சென்டருந்தால் சிறப்பு. அனால் நம் ஒவ்வொருவரின் வரிப்பணம் கொண்ட அரசு கருவூலத்திலிருந்து தான் சென்று இருக்கிறது என்னும் உண்மை நெருடுகிறது,
கலையை மதித்து கலைஞனை மதித்து செவாலியே விருது பத்ம பூஷன் விருது வாழ்நாள் சாதனை விருது என விருதுகள் குடுத்து கலைஞனை பெருமெடுத்தும் அரசை நான் வணங்குகிறேன். ஆனால் ஆயிரம் சாலைகள் குண்டும் குழியுமாக கிடக்க ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் வேலையற்று கிடக்க ,நேற்று கூட டெங்கு காய்ச்சலில் இறந்த பெண்ணை தூக்க வராத ஆம்புலன்ஸ் என்று இன்னும் ஓராயிரம் தேவைகள் தமிழகத்தில் நிறைவேற்றப்பாடாமல் கிடக்க மக்கள் வரிப்பணம் 2.8 கோடியை அரசு இதெற்கென்று செலவிட்டது சரியாகிடுமா. அதற்குரிய பதிலையும் சிவாஜி அவர்களின் திரை வசனத்தில் சொல்லி முடிக்கிறேன். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது பெருங்குற்றம் தானே . நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே !