அரசியல் பேசுவோம்
அடிமை விலங்கை தகர்த்த
வலிய ஆடவர் கண்ட
சுதந்திர பூமி இது !
சற்றும் சளைக்காத
வீர பெண்டிர் கண்ட
செந்தமிழ் நாடு இது !
இரண்டொரு அயோக்கியன் கண்டு
அவசிய அரசியலை சாக்கடை என்றோம்
அன்றே பிழை இழைத்தோம் !
அரசியல் நம் வாழ்வியல் !
உண்ணும் உணவில்
பொதிந்து வைத்துள்ளான் அரசியலை !
நடக்கும் சாலையில்
ஒட்டி வைத்துள்ளான் அரசியலை !
நிலங்களை பிடுங்கினான்
நீரை ஒட்ட உறிஞ்சினான் !
சற்றே நிமிர்ந்து பார்
தலைக்கு மேல் உள்ள
கூரையை கூட பிய்த்துவிட்டான் !
பசுமை படர்ந்த நம்
வயல்கள் எங்கே !
மண்ணை ஆண்ட நம்
பாமர விவசாயி எங்கே !
எல்லாம் கிடைத்த நம்
மளிகை கடைகள் எங்கே !
தொலைத்து கொண்டே இருக்கிறோம் !
தொலைதூரமில்லை
வரலாறு அழிக்கப்பட!
வரலாற்றில் நம் மக்கள்
சுவடின்றி தொலைந்து போக !
வஞ்சக சூழ்ச்சி விளங்காமல்
வேடிக்கை பார்க்கிறோம்!
இனியேனும் விழித்து கொள்வோம் !
ஓங்கி இடித்தாலொழிய
திறக்காது
இவர்களின் கேடுகெட்ட செவிகள் !
முகம் மறைத்தோ அகம் திறந்தோ
அரசியல் பேசுவோம் !
சத்தமாய் பேசுவோம் !
ஓட்டு வேட்டைக்காய்
ஓராயிரம் நாடகம் அரங்கேற்றும்
ஒப்பனைக்காரர்களை ஒதுக்கி வைப்போம் !
வெறுக்க கூட வேண்டாம்
மறந்து போவோம் அவர்களை !
தனித்து குரல் கொடுப்போம்
துணிந்து முடிவெடுப்போம்!