உணர்விழந்தோமா

சக உயிர் மாண்டால்
சகித்து கொள்கிறோம்!

உரிமைகள் பறித்தால்
ஊமையாகிறோம்!

தோட்டாக்கள் நெஞ்சில் தைக்க
நம் மக்கள் நிலம் சரிந்தால்
என்ன செய்தோம் நாம்?!

கோர காட்சிகளென
முகம் திருப்பி கொண்டோம்!

வரிகள் ஏய்த்தான்!
அவன் வெள்ளையன் அல்லவே
வாய் மூடி கொண்டோம்!

விலை உயர்த்தினான்!
சட்டைப்பையில் காந்தி சிரித்தார்
நமக்கென்ன
பெருமூச்சிட்டோம்!

உணவில்லை என்றான்!
மீண்டும் சிரித்தார்
துரித உணவகம் சென்று
அலுத்து கொண்டோம்!

அழ வைத்தான் அழுதோம்!
சிரி என்றான் சிரித்தோம்!

நீ நீயில்லை என்பான்!
சிரித்து கொண்டே
ஆம் என்போம்!

மானம் தொலைக்க சொல்வான்
நொடியில் செய்வோம்!

வீரம் மற என்பான்
உடனே பரண் ஏற்றுவோம்!

நடப்பது நன்மைக்கென
கண்களை
இறுக மூடி கொள்வோம்!

உணர்விழந்தோம் நாம்!

உயிர் மட்டும் எதற்கென
எவனும் கேட்டால்
அதையும் கொடுப்போம்
நல்லாசியுடன்!

எழுதியவர் : மது (6-Oct-17, 12:12 am)
பார்வை : 348

மேலே