கோமணம்

பல வண்ணத்தில்
பல அளவுகளில்
பல இடங்களில்
பல காரணங்களுக்காய்
பறந்து கொண்டே இருக்கின்றன
கட்சி கொடிகள்

எந்த கொடி சிறந்ததென்று
ஒன்றோடொன்று
போட்டியிட்டு
முடிவில் ஒரு சித்தனிடம்
சென்றன

சிரித்து கொண்டே சித்தன்
சொன்னார்
ஒன்றுக்கும் உதவாத
உங்களுக்குள்ளே சண்டையும்
போட்டியும்

உண்மையில் அந்த விவசாயின்
கோமணத்தை விட கேவலமாய்தான்
நீங்கள்

அக்கோமணம் மானத்தையும் காத்து
விவசாயின் வியர்வையில் குளித்து
தினமும் புனிதமாகிறது
என்ற சித்தன்
சிரித்து கொண்டே மீண்டும் சொன்னான்

கோமணமாய் விவசாயிகளும்
கேவல கொடிகளாய்
அரசியல் வாதிகளும்


அதிக ஆதங்கத்தோடு

கொ.சசிகலா

எழுதியவர் : கொ.சசிகலா (5-Oct-17, 11:10 pm)
Tanglish : komanam
பார்வை : 124

மேலே