குளிர் மழை

பெண்ணுக்குள்ளே பெண்ணுக்குள்ளே
இவள் புதிர்மழை
கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே
அவள் குளிர்மழை

மண்ணுக்குள்ளே மண்ணுக்குள்ளே
தேடும் பொக்கிஷமோ
விண்ணுக்குளே ஒட்டிக்கொண்டு
இறங்கா வெண்ணிலாவோ

கல்லுக்குள்ள கல்லுக்குள்ள
சிறுஈரமா காதலூருதே
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
ஒருபாரமா அதுஏறுதே

சொல்லுக்குள்ள உன்சொல்லுக்குள்ள
ஒருகவிதை பார்க்குதே
பல்லுக்குள உன் பல்லுக்குள்ள
ஒளியஇடம் தேடுதே

பார்வையாலே ஒரு பார்வையாலே
ஒரு விதை தூவுதே
பார்வையாலே உன் பார்வையாலே
என் சதை வேகுதே

தேர்வைபோல தேர்வைபோல
இதய துடிப்பு வேகமாகுதே
கோர்வைபோல கோர்வைபோல
ஆசை முத்து சேருதே

தாரைபோல தாரை தப்பட்டைபோல
என் உள்ளம் ஆடுதே
தாயைப்போல சிறு குழந்தைபோல
உன்னை மட்டும் தேடுதே

சேயைப்போல சேயைப்போல
உன் மடி தேடுதே
சாய உன்மடி சாயத்தானே
என் மனம் நாடுதே

சேரத்தான் உன்னை சேரத்தான்
என் மனம் ஏங்குதே
மாரத்தான் ஒரு மாராத்தான்போல
என மனம் ஓடுதே

கோரைப்பாய்போல ஒரு கோரைப்பாயைப்போல
கோணி போகிறேன்
நாரைபோல ஒரு நாரைப்போல
நாணி சாகிறேன்

வேரைப்போல ஒரு வேரைப்போல
எனக்குள் ஆழமானாய்
நீரைப்போல நிற்கா நீரைப்போல
என்னில் பாயுறே

தேரைபோல ஒரு தேரைப்போல
என்னை தூக்குற
சாரைபோல ஒரு சாரைப்போல
என்னைப் பாக்குற

எனக்குள்ளே எனக்குள்ளே
ஓடும் அடைமழை
உனக்குள்ளே உனக்குள்ளே
தேடும் குடைநிழல்

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (6-Oct-17, 11:08 am)
Tanglish : kulir mazhai
பார்வை : 317

மேலே