என் உசுரே

நீ என்னை
என்னவோ செய்கிறாய்

நீ இயல்பாய்
என்னை பார்த்து நகர்கிறாய்
நான் இடியிறங்கிய
மின்கம்பமாய் மாறுகிறேன்

ஒரு கருவண்டாய்
விழித்து பார்க்கிறது உன் விழிகள்
ஒரு மலரென
என் விழிகள் மலர்கிறது

ஒரு பட்டாம்பூச்சியாய்
படபடக்கிறது உன் விழிகள்
ஒரு நூல் பட்டமாய்
பறக்கத்தொடங்குகிறது என் மனசு

ஒரு பஞ்சுமிட்டாய்யாய்
பளபளக்குது உன் உதடுகள்
என் நெஞ்சுக்குள்
ஒட்டிக்கொள்ள என் ஆசைகள்

ஒரு மயில் தோகையாய்
உன் தசை துடிக்கிறது
ஒரு குயிலாய்
என் இளமை இசை பாடுது

ஒரு ஆட்டுக்குட்டியைப்போல
உன் கண்கள் பார்க்கிறது
ஒரு முயலாய்
என் இதயம் வேகம்கூடுதே

ஒரு குஞ்சு குருவியைப்போல
உன் முகம் என்முன்னே
என் நெஞ்சுக்குள் அடைகாத்திட
என் மனம் தவிக்குதே

ஒரு செஞ்சுவச்ச சிலையைப்போல
உன் உருவம் என் எதிரே
நீ எதுவும் செய்யாமலே
அதில் கரையுது என் உசுரே

ஒரு பத்தவச்ச நெருப்பைப்போல
எனக்குள்ளே பரவுரே
நீ எதுவும் சொல்லாமலே
அதில் எரியிது என் உசுரே

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (6-Oct-17, 12:37 pm)
பார்வை : 376

மேலே