கறிம்மாவா

கறிம்மாவா?
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

பாட்டிம்மா கரிமா (Garima) இங்க வந்தாளா?
😊😊😊😊😊
என்ன பொன்மணி? என்னடி கேட்ட?
😊😊😊😊
கரிமா வந்தாளா?
😊😊😊
என்னடி கறிம்மா, உப்புமான்னு கேக்கற? யாரடி அந்தக் கறிக்காரி?
😊😊😊😊😊😊
அவள் என்னோட வகுப்புத் தோழி. இன்னிக்குத்தான் மொதத் தடவையா நம்ம வீட்டுக்கு வர்றதாச் சொன்னா?
😊😊😊😊😊
ஆமாம் உன்னத் தெரியாமதான் கேக்கறேன். தமிழ்ல இல்லாத பேரா. கறிமா, சொறிமா .......இன்னும் என்னென்ன இந்திப் பேருங்கள வச்சு நம்ம தமிழ்க் கொழந்தைங்கள அசிங்கப்படுத்துவாங்களோ?
😊😊😊😊😊
அதப்பத்தி நீங்க கவலைப்படாதீங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊
அந்தக் 'கறி'-தான் அவ பேருள்ள ஒதைக்குது. எத்தனை கிலோடி அவ?
😊😊😊😊
'கரிமா' - ங்கற பேருக்கு நல்ல அர்த்தமெல்லாம் இருக்கதாம் பாட்டிம்மா.
😊😊😊😊
தமிழோட ஒட்டாத எந்தப் பேர வச்சாலும் நமக்கு அது கேவலம்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆■◆◆■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
Garima = strength, prowess, honour, warmth.

எழுதியவர் : மலர் (7-Oct-17, 12:47 am)
பார்வை : 158

சிறந்த நகைச்சுவைகள்

மேலே