முக நூல் l காதலி

முக நூலும் உன் பெயரை கடவுச் சொல்லாக பதித்தல் தான்
உள்ளே செல்ல அனுமதி தருகிறதடி உயிரே
நீண்ட நேரம் உன் செய்திக்காக ஏங்கி விக்குகிறான் இணையத்தில்
என்னுடைய (MESSENGER) தூதுவன் பதில் அனுப்ப .
அதிகம் வேண்டாம் ஒரு காலை வணக்கமாவது சொல்லடி அவன் தாகம் தீர்க்க .
இணையம் வரும் போதுதான் என் இதய துடிப்பை உணர்கிறேன்
உன் வருகைக்காக அது சப்தமிட்டு துடிக்கையில் எனக்குள்ளே
நீ அனுப்பும் குறுந்செய்திகள் என் தொடுதிரை தொட்டால்
உன் முகம் நேரலை காட்ச்சியடி என் கண்களுக்கு...
நீ அனுப்பும் குறுந்செய்தியில் உன் மூச்சு காற்றின் வெப்பத்தை
இதமாக உணர்கிறது என் தேகம் .
குளிரான இரவுகளுக்கு இதுவே போதுமடி
என் பார்வைகளுக்கு இதுவே என் தாய்மடி
இணையத்தில் ... உன் இதயத்தில் .... நான் இருப்பது தெரிந்தும்
உன்னால் எப்படி மௌன படுகொலை செய்ய முடிகிறது என்னை.
ஒரே சிந்தனையில் இருந்தால் தான் கவிதை எழுத முடியும் என்றார்கள்
எங்கே நீ அலைந்து கொண்டிருக்கிறாய் அன்பே
உன் நினைவுகளின் அலைகளால் கட்டுமரமாய் அலைந்து கொண்டிருக்கிறேன்
உன் கரம் பிடித்து என்னை கரை சேர்ப்பாய என் கலங்கரை விளக்கமே !!

முடிந்தால் உன் அன்பை கொடு நன் மூன்று முறை உன் கழுத்தில் முடிந்த பின்பு
நம் வாழ்க்கை துளிர்க்க

இல்லையேல் முடியாதென்ற வார்த்தைகளால் ஒரு அம்பை விடு
என் இதயத்தை துளைக்க. நான் துடித்து இறக்க .

மலரே மௌனம் காக்காதே அது உன் வார்த்தைகளை விட
வேகமாய் என் இதயத்தை துளையிடும் தோட்டாக்கள் .

எழுதியவர் : ராஜேஷ் (7-Oct-17, 3:08 pm)
Tanglish : kathali
பார்வை : 125

மேலே