தீ
நெருப்பை வணங்கியது
ஒரு சமயம்.
நெருப்பு வணங்குவது
இச்சமயம்.
நீரும் மணலும்
நெருப்பை அணைக்கும்.
பணத்தையும் இனி அந்தப்
பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு
கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் பலியான வழக்கில் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தபோது எழுதிய கவிதை