நினைவு சுவடு

வழமை போல தன் மகனை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு இணையதளத்தில் செய்திகளை பார்த்த வண்ணம் கதிரையில் அமர்ந்து இருந்தாள் .நிலா
புதிய கல்வி பணிப்பாளரை பாராட்டி வாழ்த்துகிறோம் என முன்பக்கத்தில் ஒரு விளம்பரம் ஒன்றை ஏதேச்சையாக பார்த்தாள். குமரனை பார்த்த அவளுக்கு
முகத்தில் சந்தோசம் வந்தாலும் மறுகணம் நினைவுகளை பின்நோக்கி நகர்த்தி சென்றது .அவன் வெறும் யாரும் இல்லை .அவன் தான் நிலாவின் மனம் விரும்பிய காதலன். தாயகத்தில் பாடசாலையில் கல்வி கற்கும் பொழுது இருவருக்கும் இடையில்தான் போட்டி வரும் .இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காது திறமையை வெளிப்படுத்துவதில்
வல்லவர்கள்.
இதனால் தான் என்னவோ இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்தனர்.

இந்த விடயம் நிலாவின் வீட்டிற்குத் தெரிய வரவே அவர்களும் நிலாவை வெளிநாட்டில் வசிக்கும் தங்கள் தூரத்து உறவான சொந்தகார பொடியனுக்கு திருமணம் செய்து வைப்போம் ,அவனும் சரியான குழப்படியாம் மாமாவும் கேட்டு கொண்டு இருக்குறார் என நினைத்து நிலாவைப் பற்றி யோசிக்காமல்
தங்கள் முடிவை அவள் மேல் திணித்து அவசரம் அவசரமாக திருமணம் முடித்து அனுப்பிவைத்தார்கள் .
நிலாவின் கூடாத நேரமோ
என்னவோ விசாவும் விரைவாக கிடைக்க வெளிநாடு போய் சேர்ந்தாள்.
வந்து சேர்ந்த அவளுக்கு அந்த கலாச்சாரம் புதிதாக இருந்தது ,அதோடு வெறுப்பையும் கொடுத்தது .
காலப்போக்கில் மாறி விடும் என மாமா மாமி ஆறுதல் கூறவும், பொறுமையை கைக் கொண்டாள். ஒரு சில வருடம் கழித்து மகனும் பிறந்தான்.
இந்த நேரம் தான் கணவனும் சந்தோசம் என்ற பெயரில் தோழிகள் தோழனோடு வீட்டில் வைத்து
குடிப்பதும் அதற்கு நிலா எதிர்த்தால் கடும் வார்த்தைகளால் பேசுவதும் உதவி கேடடால் செய்ய மறுப்பதும் ,தன் மகன் என்று குத்திக்காட்டுவதும் இதற்கு
அவனுடைய மாமா மாமி துணை போவதும் நிலாவுக்கு விரக்தியை அதிகரித்து .அதனால் மனம் உடைந்து
இவனை கட்டி என்ன சுகம் கண்டேன் ,இவனுடைய மாமா மாமிக்கு சேவை செய்ய இங்கு வந்தேனா எண்ணி ,இவர்களோடு சேர்ந்து வாழ்வது இனி சாத்தியமில்லை என
முடிவெடுத்து,
மகனோடு தனிமையில் பிரிந்து சென்றாள். கணவனும் சமரசத்த்துக்கு வராமல் இன்னொரு தோழியை திருமணம் செய்து கொண்டான்

எழுதியவர் : காலையடி அகிலன் (8-Oct-17, 10:42 am)
சேர்த்தது : இஅகிலன்
Tanglish : ninaivu suvadu
பார்வை : 301
மேலே