டாம் சிட்டு

ஒரு அடர்ந்த காடு.அன்று அங்கு பயங்கரமான மழை . இடி மின்னல் சத்தத்தை கேட்டு பயந்து ஒடுங்கி கொண்டிருந்தது கூட்டுக்குள் நடுங்கி கொண்டிருந்த சின்ன சிட்டுக்குருவி ஓன்று. அது இரை தேட போன தன அம்மா குருவி இன்னும் வரவில்லையே எனச் சோகமாக அடிக்கடி எட்டி பார்ப்பதும் பின் இடி சத்தம் கேட்டதும் உள்ளே நுழைவதாகவும் இருந்தது.

திடீரென பெரிய இடி சத்தத்தோடு வீசிய பலத்த காற்றில் எதிர்பாராத நேரத்தில் அந்தக் குட்டி குருவியின் பழைய கூடு பொத்தென கீழே விழுந்து சிதறியது. கூட்டிலுருந்த குருவியும் சேர்ந்து விழுந்தது. விழித்த குருவி ஓவென அழுதது. மழை சத்தத்தில் பாவம் அந்தக குட்டி குருவியின் அழுகை யாருக்கும் கேட்கவில்லை. அது மெல்ல மரத்தின் அடியில் ஒதுங்கியது .

கொஞ்ச நேரம் கழித்து காட்டில் நன்கு ஒரு ஓநாயை வேட்டையாடி வயிறு நிறைந்த புலியொன்று மதிய தூக்கத்துக்காக தன குகை வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தது. அப்போது அது குகையின் அருகே உள்ளே மரத்தின் அடியில் கிடந்த இந்த சிட்டுக்குருவியை பார்த்து ஐயோவென்று பரிதாபப்பட்டு அதன் அருகில் சென்றது. புலியைக் கண்டு பயந்த குட்டிக்குருவி அப்படியே பயத்தில் மரத்தோடு ஒட்டிக்கொண்டது.

சிட்டுக்குருவியின் பயத்தைப் புரிந்துகொண்ட புலி மெதுவாக "குட்டி பயப்படாதே இந்த மழையில் நடுங்கும் உன்னைக காப்பாற்றத்தான் நான் வந்தேன்" என்றதும் குருவிக்கு கொஞ்சம் மூச்சு வந்தது. புலி தன் ஒரு காலில் சிட்டுக்குருவியை அமுக்கி தூக்கி கொண்டது. இன்னொரு காலில் குருவியின் கூடையும் தூக்கிக கொண்டு குகையை நோக்கி வேகமாக ஓடியது.

குகையில் நுழைந்ததும் சிட்டுக்குருவியை மெல்ல இறக்கி விட்டது. புலி தனக்கு உதவி தான் செய்கிறது என்றுத் தெரிந்தாலும் குருவியின் அச்சம் விலகவில்லை. இரு இரு உன் குளிருக்கு இதமாக நெருப்பு மூட்டுகிறேன் என்ற அந்தப் புலி அங்கே பாரு என்று கை காட்டியது.அங்கு ஒரு குட்டிப் புலி நேசமாக சிரித்தது. குட்டிபுலிக்கு தன் வீட்டுக்கு விருந்தாளியாய் வந்த சிட்டுக்குருவியைக் கண்டதும் ஓரே சந்தோசம். ஆனால் பாவம் சிட்டுக்குருவி தான் குட்டிப் புலியை பயத்தோடு பார்த்தது.

குட்டிப் புலி மெல்ல வந்து என் பேரு டாம் உன் பேரு என்ன என்றது. குருவி மெல்ல என் பேரு சிட்டு என்றது.டாம் கைகுலுக்க தன் கைகளை நீட்ட சிட்டு அச்சப்படுவதை பார்த்ததும் அம்மாவிடம் ஓடியது. நெருப்பை மூட்டி அறையை சூடாக்கிய அம்மா புலி அடுப்பில் மட்டன் சூப் தயாரித்துக் கொண்டிருந்தது. டாம் ஓடிப்போய் "அம்மா சிட்டு என் கிட்ட கை குலுக்கலம்மா" என்று வெகு சோகமாக சொன்னது. "அப்படியா புதுசுல ட. அதான் பயப்படும் குட்டி. நீ போ நான் சூப்பை ஊற்றிக் கொண்டு வருகிறேன்" என்றது. டாம் அம்மாவையே கட்டிக் கொண்டு நின்றது. இவர்களின் பேச்சை தூரமாக நின்று சிட்டு கேட்டுக் கொண்டிருந்தது.

அம்மா புலி மூன்று பேருக்கும் சூப் கொண்டு வந்தது. "உன் பேரு சிட்டுவாடா . சிட்டு கண்ணா சூடாக சூப் குடி உன் குளிர் சரியாகும் "என்று நடுங்கிய சிட்டுவின் முதுகை மெல்ல வருடிச் சொல்லியது. குளிர் தாங்காத சிட்டு சூப்பை மெல்ல அலகால் உரியத் தொடங்கி இருந்தது. இப்போது அதன் அச்சமும் குளிரும் போகத் தொடங்கியிருந்தது.

இப்போது சிட்டு தானாக டாமிடம் கைகுலுக்கியது. டாம் ரொம்ப குஷியாகி தன் வீட்டிலுள்ள விளையாட்டு ஜாமானெல்லாம் கொண்டு சிட்டு முன்னாடி அடுக்கியது, டாம் சிட்டு இருவரும் நேரம் போனது தெரியாமல் விளையாடாத தொடங்கினர்.. வெளியே அடித்த பெருங்காற்றுடன் கூடிய மழை சத்தம் இப்போது இவர்களுக்கு கேட்கவில்லை.
**********

மெல்ல பெரு மழை நின்றது சிறு தூறலானது . சிட்டுவுக்கு அம்மாவின் நினைவு வந்து அம்மா என்னைத் தேடுவார்களே என்றது. அம்மா புலி நீ விளையாடு நான் போய் பார்த்து வருகிறேன் என்றது. அது சிட்டுவைக் கண்டெடுத்த மரத்தை நோக்கிச் சென்றது. அங்கே தாய்க் குருவி குட்டியைத் தேடி தேடி அங்கே அலைந்து கொண்டிருந்தது. மரத்தை நோக்கி வந்தப் புலியைக் கண்டதும் தாய்க்குருவி பயந்து மரக்கிளையில் ஏறி அமர்ந்தது .புலி சிட்டு தன்னிடம் இருப்பதாக சொன்னதை நம்ப முடியாமல் தன்னைச் சாப்பிடத்தான் புலி அப்படிச் சொல்கிறதோ என நினைத்தது. இருந்தாலும் சிட்டுவின் பெயரைச் சொன்னதால் முன்னால் போன புலியின் பின்னாலே போனது.

அச்சதோடு குகைக்குள் நுழைந்தால் அதற்கு பெரிய ஆச்சரியம் காத்து கொண்டிருந்தது. தன் சிட்டு குட்டிப் புலியோடு பந்து விளையாடிக்கொண்டிருந்ததை கண்ட அம்மா குருவி ஆனந்தத்தில் திளைத்தது. சிட்டு ஓடி வந்து அம்மாவை கட்டிக் கொண்டது. தாய்க்குருவி நிறைய நன்றி சொல்லி தன் கூட்டையும் சிட்டுவையும் கூட்டிப்போனது. சிட்டு டாம் டாட்டா என்றபடியே போனது.

அதன் பிறகு அம்மகுருவியும் அம்மா புலியும் கூட மெது மெதுவாக நண்பர்கள் ஆகிவிட்டனர். அம்மா குருவி இரை தேட போகும் போதெல்லாம் சிட்டு குட்டிப் புலியோடு விளையாட குகை சென்று விடும். பறக்கும் சிட்டுவைப் பாய்ந்து பிடிக்க முயலும் டாமின் துள்ளல் என அவர்களின் சிரிப்பு சத்தம் அந்த குகையை நிறைந்திருக்கும்., அம்மா புலி வேட்டையாட செல்லும் போது டாம் சிட்டுவின் மரத்தில் வந்து கண்ணாம்பூச்சி ஆட்டம் விளையாடாத தொடங்குவர். அம்மாக்கள் வரும் வரை அந்த மரங்களை சுற்றி சுற்றி அவர்களின் ஆட்டங்களும் ஓட்டங்களும் சிரிப்பு சத்தங்களும் தொடரும்.

அந்த சாயங்கால மழைக்கால காற்றில் நண்பர்களான டாம் சிட்டு இருவரும் இன்று வரை அழகான நண்பர்களாய்!!

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (10-Oct-17, 1:11 am)
பார்வை : 268

மேலே