சிநேகிதனே -அத்தியாயம் - 05

....சிநேகிதனே....

அத்தியாயம் : 05

"அடி மித்ரா...நல்லாவே அடி...ஏன் ஒரு அறையோட நிறுத்திக்கிட்ட,அன்னைக்கு நீ என் மனசில ஏற்படுத்திட்டுப் போன வலியை விட இது ஒன்னும் எனக்குப் பெரிசில்லை..."

"இந்த நாலு வருசமா என்னோட நினைப்பு உனக்கு ஒரு நிமிசம் கூட வரலையா மித்ரா...நான் எப்படி இருக்கேன்,என்ன ஆனேன்..எதைப் பத்தியுமே நீ கவலைப்படல இல்லை....என்னோட ஞாபகமே உனக்கு இல்லாமப் போச்சில்ல மித்ரா...??.."

அவனுக்கு நான் என்ன சொல்லி என்னைப் புரிய வைப்பேன்...என்னை மறந்து தூங்கும் நேரம் தவிர அவனை நான் ஒரு விநாடி கூட நினைக்கத் தவறியதில்லையே...அவனை மட்டுமே நினைத்து தினம் தினம் கண்ணீர் வடித்ததை அவன் அறிவானா...?இல்லை அவனை மறக்கவும் முடியாமால்...அவனிடம் பேசவும் முடியாமல் நான் தவித்த தவிப்பைத்தான் அவன் உணர்ந்து கொள்வானா...??

அவனுக்கு பதில் சொல்ல முடியாமல் ஊமையாகவே அழுது கொண்டிருந்தது என் உள்ளம்...ஆனால் அவன் இப்போதும் என்னை விடாமல் துளைத்துக் கொண்டேதான் இருந்தான்...

"எதுக்குமே நிமிர்வா நின்னு பதில் சொல்ற என்னோட மித்ரா...இப்போ எங்க...? காணாமல் போயிட்டாளா...?இல்லை அவளுக்குள்ளேயே அவள் ஒளிஞ்சுகிட்டாளா...??..."

"பதில் சொல்லு மித்ரா....இப்படி நீ மௌனமாவே இருந்திட்டா நான் உன்னை விட்டிடுவேன்னு மட்டும் நினைக்காத...நான் முதலே சொன்னதுதான் மித்ரா... என்னோட எல்லாக் கேள்விகளுக்கும் நீ இன்னைக்கு பதில் சொல்லியே ஆகனும்...."

"எதை சொல்லச் சொல்லுற சரண்....நான் என்ன சொன்னாலுமே அது எல்லாமே பொய்....எல்லாமே வெறும் நடிப்பும் நாடகமும் என்டு சொல்லிட்டிருக்கிற உன்கிட்ட என்னத்த சொல்லச் சொல்லுற சரண்....??..."

"என்னோட ஞாபகமே உனக்கு வரலையான்னு கேட்டியே...என்னோட நினைவுகள் உனக்கு ஒரு நாள் கூடவா வராமல் போச்சு...??.."

"நான் ஒன்னும் நீ வரவே முடியாத இடத்துக்குப் போகலையே...உண்மையிலேயே நீ என்னைக் காதலிச்சிருந்தா நீ ஏன் என்னைத் தேடி வரல சரண்..."

"இப்போ நீ என்கிட்ட அடுக்கடுக்கா கேட்டிட்டே இருந்தியே...இதெல்லாம் உனக்கு இப்போதான் தோனிச்சா...ஏன் இதெல்லாம் நாலு வருசத்திற்கு முன்னாடியே உனக்கு தோனாமப் போச்சு சரண்...??.."

அவன் என்னைக் கேட்டத் தாக்கத்தில், ஏன் அவன் என்னைத் தேடவில்லை என்ற ஆற்றாமையில் அவன் கேட்ட அதே கேள்விகளை அவனிடமே நான் திருப்பிக் கேட்டிருந்தாலும்...

இந்த நான்கு வருடங்களாக அவன் என்னைத் தேடி வந்துவிடக் கூடாதென்பதே என் எண்ணமாக இருந்தது...மறந்தும் அவன் என்னை நினைத்துவிடக் கூடாதென்பதே என் வேண்டுதலாக இருந்தது...

ஆனாலும் மனதினோரமாய் அவன் என்னிடம் பேச மாட்டானா...?என்னைத் தேடி ஒரு தடவையாவது வந்துவிட மாட்டானா என்ற ஏக்கம் என்னுள் இருந்ததையும் மறுப்பதற்கில்லை...

ஆனாலும் இதை எல்லாம் கடந்து...அவன் தனக்கான குடும்பம் குழந்தையென்று மகிழ்ச்சியான ஓர் வாழ்க்கையை வாழ வேண்டுமென்பதே என் ஆசையாக இருந்தது...

அதனால்தான் என் மூச்சுக்காற்று கூட அவன் மேல் பட்டுவிடக் கூடாதென்று எனையே எனக்குள் அவன் சொன்னது போல் மறைத்துக் கொண்டேன்....எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவன் என்னை நெருங்கி விடக் கூடாதென்பதற்காகத் தான் எனக்கு நானே போலி முகமூடி அணிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்....

"உண்மைதான்....உன்னைத் தேடி உன் பின்னாலேயே வந்திருக்க எனக்கு எவ்வளவு நேரமாயிருக்கும்...ஆனால் நான் உன்னைத் தேடி வரணும்னு நீ உண்மையிலேயே நினைச்சியா மித்ரா...??.."

"இவ்வளவு நேரமா...என்னைப் பத்தி நீ நினைச்சியான்னு கேட்டியே...?அப்படி உன்னையே நான் நினைச்சு உருகிட்டு இருக்கனும் என்கிறதுக்காகவா நீ என்னை விட்டிட்டுப் போன...??.."

"இல்லையே...நீ என்னை வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டுப் போனதுக்கான காரணம்தான் வேற ஆச்சே...அப்புறம் எப்படி நான் உன்னைத் தேடி வரனும்...உன்னையே நான் நினைச்சிட்டிருக்கனும்னு நீ ஆசைப்பட்டிருப்ப...??.."

"என்ன அப்படிப் பார்க்கிற...எப்படி இவனுக்கு எல்லாம் தெரியும்னு யோசிக்கிறியா...??..எனக்கு எல்லாமே தெரியும் மித்ரா...என்பதை ஓர் விதமான அழுத்தத்தோடு சொன்னவன் என்னைக் கூர்மையாக நோக்கினான்....

தனக்கு எல்லாம் தெரியும் என்று அவன் சொன்ன போதே லேசாகத் தடுமாறத் தொடங்கிய என் மனம் அவனது கூர்மையான பார்வையில் மொத்தமாய் குழம்பிப் போனது...


தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (11-Oct-17, 7:54 am)
பார்வை : 494

மேலே