சற்று சித்திப்போமே
""காலத்தே பயிர் செய்"" முன்னோர்கள் சொன்ன பழமொழி தான்.ஆனால் அதில் எத்தனை
அர்த்தங்களை தேக்கி வைத்து கொண்டு இருக்கிறது.
விவசாயி மழை பெய்து இருக்கும் போது அவன் நிலத்தை உழுது பயிர் செய்தால் அவன்
நிலத்தில் அவன் போட்ட விதைகள் முளைத்து பலன் தரும்.
பையனோ பெண்ணோ அவர்கள் படிக்க வேண்டிய வயதில் படிக்காமல் இருந்து விட்டால்
அவன் வாழ்க்கையே வீணாகி விடுகிறது.
பருவம் அடைந்த பொண்ணுக்கோ பையனுக்கோ காலாகாலத்தில் திருமணம் செய்து வைத்தால்
தான் அவன் குடும்பமோ அவள் குடும்பமோ வளரும்.
சிறு வயசில் இருந்து அவன் விரும்பிய விளையாட்டை கஷ்டப் பட்டு முழு கவனம் செலுத்தி
ஆடி வந்தால் தான் அவன் ஒரு சாம்பியன் ஆக முடியும்.
இது போன்று பல உதாரணங்களை கொடுத்து கொண்டே போகலாம்.
எல்லா மதத்தினரும் மறுக்க முடியாத உண்மை ஒன்று தாங்க.
வீட்டில் இருக்கும் பெரியவர்கள் "" ஆசீவாதம்"" ஒருவருக்கும் அவர்கள் வாழ்க்கையில் வர
போகிறவருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இருந்தால் தான் நல்லது என்பது.இதில் எந்த
விதமாமான சந்தேகமும் இல்லை!!!.
இப்போது இருக்கும் இளைஞர்களை நல்ல விதமாக அவர்கள் சக்திக்கு தகுந்தார் போல்
வளர்த்து ஒரு பொறுப்புள்ள ஆணாகவோ பெண்ணாகவோ அவர்கள் பெற்றோர்கள்.அவர்களை கரை
ஏற்றி விடுகிறார்கள்.
இந்த காலத்தில் அப்படி கரை ஏறிய ஒவ்வோர் ஆணும் பெண்ணும் அவர்கள் காலை ஊன்றிய
பிறகு அவர்கள் வாழ்க்கை துணைவரை அவர்கள் ஆசைப் பட்டது போல அமைத்துக் கொண்டு
சந்தோஷத்தை தேடி வருகிறார்கள்.நாம் இந்த ""வாழ்க்கை துணைவரை"" தேடி கொண்டது நம்மை
வளர்த்து ஆளாக்கிய பெரியவர்களுக்கு பிடித்து இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி அவர்கள்
கவலைப் படுவதே இல்லை.அவர்கள் தேர்வு செய்வது நமக்கு சரி இல்லை, நாம் தான் நமக்கு வரும்
வாழ்க்கை துணைவர் இப்படி இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.
எனக்கு இதிலே எந்த வித தப்பும் தெரியவில்லை.முந்தைய காலம் போல் இப்போதைய காலம்
இல்லை.முன் பின் தெரியாத உறவில் இருக்கும் ஒருத்தி,முறை மாமன், சின்னவயசிலே பெரியவங்க
அவர்கள் குல வழக்கப்படி சின்ன வயசிலே செய்து கொண்ட "" நிச்சயதார்த்தம் "" இவைகள் நம்
வாழ்க்கைக்கு ஒத்து வராது.நாமே ஒருவரை சந்தித்து பழகி ஒருவர் மனதை மற்றோருவர் நன்றாக
புரிந்து கொண்டு திருமணம் செய்து கொண்டால் தான் வாழ்க்கை செம்மையாக இருக்கும் என்கிற
இன்றைய கால கட்டத்தில் வளர்ந்து வரும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பது ரொம்ப
சாதாரணமாக ஆகி விட்டது.
திருமணம் செய்து கொண்டு அவர்கள் ஆசை, அவர்கள் குழந்தைகளின் எதிர்காலம், அவர்கள்
வசதியாக இருந்து வர ஒரு நல்ல வீடு,அந்த வீட்டுக்கு எந்த விதமான குறையும் வைக்காமல் நிறைய
வசதிகள் என்னாம் செய்து வருகிறார்கள்.ரெண்டு பெரும் வேலைக்கு போய் வர கார் வசதி,
குழந்தைகளை ஒரு நல்ல கான்வென்டிலோ. இல்லை மிகவும் புகழ் வாய்ந்த பள்ளி கூடத்திலோ படிக்க
வைத்து அவர்கள் வசதியாக போய் வர இரு சக்கர வண்டியோ இல்லை தனியார் நடத்தும் வேன்.
இல்லை தனியாக ஒரு ஆட்டோ எல்லாம் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.இதை தவிர அவர்கள் வேலை
ஏற்ப அவர்கள் உடைகள்,குழந்தைகள் உடைகள்.வார நாட்களில் பெரிய ஹோட்டல்களில் உணவு
சாப்பிடுவது, அவர்கள் பிறந்த, அவர்கள் கல்யாண நாள், குழந்தைகளின் பிறந்த நாள் இவைகளை
எல்லாம் நண்பர்களுடன் கொண்டாடி வருவது.சினிமா, "மால்களுக்கு"" போய் " என்ஜாய்" பண்ணுவது
எல்லாம் அவர்கள் வாழ்க்கைக்கு மிக அவசியம் என்று நினைத்து சந்தோஷமாக செய்து வருகிறார்கள்.
இன்றைய கால கட்டத்தில் அவர்கள் அவர்களின் சம்பளத்திற்கு ஏற்ப வருமானவரி கட்டி,வாங்கி
இருக்கும் வீட்டுக்கு "" மாத தவணை"" கட்டி, அவர்கள் அன்றாட வாழ்க்கைக்கு அவசியம் ஏற்படும்
சாமான், செல் போன் முதலியவைகளை வாங்கி வர அவர்களுக்கு நிறைய பணம் தேவைப் படுகிறது.
இந்த நிலையில் அவர்களை வளர்த்து ஆளாக்கிய பெரியவர்களை அவர்கள் கூட வைத்துக்
கொள்வதோ, வயதான அவர்களுக்கு அடிக்கடி மருத்துவம் செய்ய வேண்டிய கஷ்டம் இருப்பதாலோ,
அவர்கள் வியாதி அதிகமாகி படுத்த படுக்கையாய் ஆகி விட்டார்கள் என்றால் யார் அவர்களை கூட
இருந்து பார்த்து கொள்வது போல பல தொந்தரவுகளை அவர்கள் சந்திக்க விருப்பப்படுவதில்லை
அதனால் அவர்கள் சும்மா இருந்து விடுகிறார்கள்.
அந்த பெரியவர்கள் நாம கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளைகள் நம்மை 'உதாசீனம்" பண்ணி விட்டு
போய் விட்டார்களே என்கிற ஆழ்ந்த துயரத்தாலோ, தனிமை வாழ்க்கை வாழ்ந்து வருவதாலோ , பணக்
கஷ்டத்தாலோ, இல்லை வியாதி முத்தி போய் போனதாலோ அவர்கள் இந்த உலகத்தை விட்டு போய்
விடுகிறார்கள்.
விஷயம் கேள்வி பட்டு அவர்கள் வளர்த்து ஆளாக்கியவர்கள் அவர்களுக்கு செய்ய வேண்டிய ஈமக்
கடன்களை செய்து விட்டு அவரவர்கள் வாழ்க்கையை கவனிக்க போய் விடுகிறார்கள்.
பிறகு அய்யர் சாதிக்காரனாய் இருந்தால் வருஷ திவசம்,அமாவாசை தர்ப்பணம் எல்லாம் செய்து
விட்டு மறைந்த பெரியவர்களின் ஆஸீர்வாதத்தை அவர்களுக்கும் அவர்கள்களுக்கும், அவர்கள்
குழந்தைகளுக்கும் வேண்டி வருகிறார்கள்.மற்ற ஜாதியினர் பெரியவர்கள் மறைந்த அன்றைக்கு ஒரு
அய்யரை அழைத்து "" திதி"" பண்ணி விட்டு மறைந்த பெரியவர்களின் ஆஸீர்வாதத்தை அவர்களுக்கும்
அவர்கள் குழந்தைகளுக்கும் வேண்டி வருகிறார்கள்.
அவர்கள் வாழ்ந்து வந்த காலத்தில் அவர்களை மிக மிக சந்தோஷமாக வைத்து வந்து இருந்தால்
தானே அந்த பெரியார்களின் பூரண ஆஸீர்வாதங்கள் கிடைக்கும் இல்லையா!!!
ஒரு விவசாயி மழை நின்று போய் பல மாதங்கள் ஆகி அவன் உழுது பயி செய்ய நினைத்தாலோ,
ஒரு பையனோ பெண்ணோ படிக்க வேண்டிய காலத்தில் படிக்காமல் இருந்து விட்டு, அவனுக்கு வயது
ஏறி போன பிறகு படிக்க முயற்சி செய்தாலோ, பருவம் கடந்து பல வருஷம் ஆனா ஒரு ஆணோ
பெண்ணோ திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெற்று கொண்டு சந்தோஷமாக வாழ
நினைத்தாலோ, பெரியவனாக ஆவ பிறகு ஆட்டம் ஆடி ஒரு சாம்பியன் ஆக விரும்பும் ஒருவனுக்கும்
கிடைக்கும் பலன் இவர்களுக்கும் கிடைக்கும் இல்லையாங்க.
ஏன் நாம் "" காலத்தே பயிர் செய்து"" பலனை அனுபவிக்கக் கூடாது"""
சற்று சித்திப்போமே????