"நதியோட்டம்...4"

நதியே! உன்
உயிரூட்ட பாதைகளை,
கலாச்சார நுழைவாயிலாகவும்
நாகரீகத்தின் நகரமாகவும்,
வளமையின் இருப்பிடமாகவும்
நீண்ட பட்டியலிடுகின்றனர்...
இத்தனை செய்தும்
எத்தனை அமைதியாய்,
யாருக்கும் தொந்தரவின்றி
உன்வழி பார்த்து
ஊர்ந்து செல்கின்றாயே...
உன் கருணையால்
காலங்கள் கரைகின்றன...
தெளிந்த நதியோட்டமாய்...!!!