என் அழகிய ராஜகுமாரா

காதலை ஊண், உயிருடன் கரைத்த காதலனின்,
கைமாற்றிய கனவுப்பொருள் கண்ணுற்றேன்.

காய்த்து வெடித்துச் சிதறிய இலவமரத்தின்
பறந்து கலந்த பஞ்சினைப்போல

ஆங்கே சிதறிக்கிடந்தன பஞ்சுமேகங்கள்.
குளிர்நிலா, தெரிந்தது அவனின் நடுவில்.

ஒவ்வொரு உன் உயிர்த்துடிப்பிலும் என்னுயிர் கலைந்திருப்பது கண்டு கவலையுற்றேன்.

உன்னிடம் தனிமையில் வரத்துடித்த
அந்த, இருதருணங்கள், ரயிலோசை காற்றில்
கரைந்து முடியும் வரை மூளைக்குள்
ஒளிவீசிச் செல்கிறது.

பகலுணவு உன்னோடு கொண்ட அந்த
முழுநிலவு தினம், காக்கைகள் கரைகையில்
நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன,
அந்தக் கால்கொழுசின் அழகினை.

உன் இரு நினைவு தினங்களில் உன்
முத்தத்தில் கரைந்துவிட்டிருப்பேன்,
ஆனாலும் ஏனோ என் மனம் என் தாய்
பற்றின சோகங்களையே எறிந்துவிட்டிருந்தது.

நினைவுகளை மட்டுமே எனதாக்கிய
எனதின்ப உறவுகளே வாழ்க்கை சாத்தியமாய்.


எழுதியவர் : thee (27-Jul-11, 10:48 am)
சேர்த்தது : ரதி பிரபா
பார்வை : 290

மேலே