மாண்புமிகு திருடன்
என்
உறக்கஅலமாரியில்
சேமித்து வைத்த
அத்தனை கனவுகளும்
இறைந்து கிடந்தன......
பதற்றத்தில்....
அறையை திறந்து பார்த்தேன்
அங்கங்கே
குவியல்குவியலாய்
வீட்டின் முழுப்பரப்பையும்
ஆக்கிரமித்துக்கொண்டு
கனவுகள்......
திரும்பி பார்த்து
திடுக்கிட்டேன்.....
அலமாரியையே காணவில்லை.....
எவனவன்
விலை உயர்ந்த கனவுகள் எனும்
தங்கக்காசுகளை
அள்ளி இறைத்துவிட்டு
அலமாரியை
களவாடி போனவன்.?
ஒரு நீளமான
யோசனைக்கு பிறகு
காவல் நிலையம் சென்று
புகார் அளித்து
திரும்பி வந்தேன்
என் வீட்டுவாசலில்
அவசர அவசரமாய்
வந்து இறங்கிய
காவலர்கள்
திருடனை பிடித்து விட்டோம்
உங்களையும்
கைது செய்கிறோம் என்று
காவல் நிலையம்
அழைத்து சென்றனர்
என்னையும்.....
திருடனை
என் இதயவீட்டில்
பதுக்கி
வைத்த
குற்றத்திற்காக..........