ஆனந்த் நாகராசன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஆனந்த் நாகராசன் |
இடம் | : மேலவாசல் |
பிறந்த தேதி | : 13-Apr-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 89 |
புள்ளி | : 13 |
மழலை சிரிப்பு
.................................
அவர்
இலக்கணச் செம்மல்.
மரபின் மைந்தன்.
கவிதையில்
சீர்
தளைதட்டினாலும்......
ஓசை நயம்
ஒதுங்கி இருந்தாலும்.........
எதுகை மோனை
இடம் மாறி அமர்ந்திருந்தாலும் .......
சந்தம்
தடம்புரண்டு இருந்தாலும்.....
உவமையில்
வறுமை மேவியிருந்தாலும்..........
மன்னிக்க மாட்டார்
தன்
கழுகுப்பார்ப்பவையில்
கொத்திவிடுவார்...........
அவர்
மழலை சிரிப்பை
பார்த்து
வாய்மலர்ந்தார்
" அடடே !
இந்த புன்னகை
சிரிப்பின் இலக்கணத்தையே
திருத்தசொல்கிறதே "
மலர்வனம், பாலைவனம், சாக்கடை என பேதமின்றி
சரிவிகிதத்தில் அமுதம் பொழியும் மேகம்.
சூரியன், சிமிலி, சுருட்டு என பேதமின்றி
சுடரேற்றும் தீ.
வேம்பு ரோசா கள்ளிப்பூ என பேதமின்றி
வாய்வைத்து கள்ளருந்தும் பட்டாம்பூச்சி.
புல்லாங்குழல் நாசித்துளை சங்கின் செவியென
பேதமின்றி இசையை வருசிக்கும் பூங்காற்று.
பள்ளத்தாக்கு, மேடுபள்ளம் குண்டுகுழி பேதமின்றி
பாய்ந்து மட்டப்படுத்திக்கொண்டே விரைந்தோடும் நதிமகள்
இயற்கையின் மடியில் இருக்கும்
அஃறிணையெல்லாம் ஒரே லயத்தில் ஒரே சுதியில்
உச்சரித்துக்கொண்டு போகின்றன சமத்துவ கீதத்தை
இயற்கையின் சமத்துவதிலிருந்து
வலுக்கட்டாயமாக விவாகரத்து பெற்றுக்கொ
தனிமையில் கவனமாக நடக்கிறேன்
ஏறி மிதிக்கின்றன
அவள் நினைவுகள் கூட்டமாய் வந்து
ஆனந்த் நாகராசன்
மேலவாசல்
புறத்தில் மலரும் காதல்
பறவைக்கும் மரத்திற்கும் இருக்கும் சினேகம் மாதிரி......
கனி தீர்ந்து கிளை முறிந்து
மரம் மூளியானால்
ஓடிவிடும் பறவை பிறிதொரு மரம்தேடி
அகத்தில் சூல்கொள்ளும் காதல்
வேருக்கும் மரத்திற்கும் இருக்கும் உறவு மாதிரி.......
புயல்
கிளைகளை சிரச்சேதம் செய்தாலும்....
இலையுதிர்காலம்
இலைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தினாலும் .....
வெயில்
அக்னிமழையை தலையில் பொழிந்தாலும் ......
பூகம்பம்
குப்புற கவிழ்த்து போட்டாலும்
இறுதிவரை பயணிக்கும் துணையாக
வேர் மாதிரி..................
தாய்மை
.....................................
பருந்தைக் கண்டால்
பருந்தின் தூரம்வரை
பறந்தடித்து
குஞ்சிற்கு ராணுவச்சேவை வழங்கும்
கோழி.......
எசமானன்
கொடுத்த தீனியை
வட்டிப்போட்டு
பாலாக வசூலித்து கொண்டாலும்
உள்மடியில் பதுக்கி
கன்றுக்கு அமுதூட்டும் பசு.....
குயில்முட்டையா?
தன்முட்டையா?
இனபேதம் காட்டாமல்
குயிலுக்கும் சேர்த்து
அடைகாக்கும் காகம்...
வேறென்ன
தாய்மை தானே... ?
ஆனந்த் நாகராசன்
மேலவாசல்
என்
உறக்கஅலமாரியில்
சேமித்து வைத்த
அத்தனை கனவுகளும்
இறைந்து கிடந்தன......
பதற்றத்தில்....
அறையை திறந்து பார்த்தேன்
அங்கங்கே
குவியல்குவியலாய்
வீட்டின் முழுப்பரப்பையும்
ஆக்கிரமித்துக்கொண்டு
கனவுகள்......
திரும்பி பார்த்து
திடுக்கிட்டேன்.....
அலமாரியையே காணவில்லை.....
எவனவன்
விலை உயர்ந்த கனவுகள் எனும்
தங்கக்காசுகளை
அள்ளி இறைத்துவிட்டு
அலமாரியை
களவாடி போனவன்.?
ஒரு நீளமான
யோசனைக்கு பிறகு
காவல் நிலையம் சென்று
புகார் அளித்து
திரும்பி வந்தேன்
என் வீட்டுவாசலில்
அவசர அவசரமாய்
வந்து இறங்கிய
காவலர்கள்
திருடனை பிடித்து விட்டோம்
உங்களையும்