எங்கே மனிதம்

மாலைநேர பயணமதில் நெரிசல்களுக்கிடையே
மெல்ல மெல்ல ஊர்ந்துகொண்டிருந்த அப்பேருந்தில்
நடுத்தர வயது பெண்ணொருவர் ஏறியிருந்தார்.
மண்ணும் மணலும் சேலையில் ஆங்காங்கே பதுங்கியிருந்து
அவரின் பணியை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது.
பேருந்தின் தடுமாற்றத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த
இளவயது பெண்ணொருவரின் மேல் சாய்ந்துவிட
படக்கூடாதது தன்மேல் பட்டுவிட்டது போலவும்,
தொடக்கூடாததை தொட்டுவிட்டதைப்போலவும்
முகம் சுளித்தபடியே ச்சீ அறிவில்லையாயென்றும்
மரியாதை குறைவாகவும் பேசிய அப்பெண்ணை
பார்க்கையில் எனக்கு அருவறுப்பாகத்தான் இருந்தது..

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (12-Oct-17, 10:09 am)
Tanglish : engae manitham
பார்வை : 383

மேலே