என் இதய

இதயத்தின் வடிவத்தை
அறிவியல் பாடப்புத்தகத்தில்
தான் பார்த்திருக்கிறேன்

என் இதயத்தின்
வடிவத்தை எனக்கே
உணர செய்தது நீ தான்
உன் நினைவுகளில்
அது விம்மும்போது
என் இதயம்
தனித்தீவாய் அதன்
வரைபடம் வெகு தெளிவாய்
எனக்கு தெரியுதே

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (14-Oct-17, 4:40 am)
Tanglish : en ithaya
பார்வை : 944

மேலே