விழியோரம் நீர்த்துளி
உனக்காக காத்திருக்கிறேன்
நீ சொன்ன நேரத்திற்கும்
முன்னமே வந்து நின்று...
இரத்த நாளங்களில்
இரத்தத்தின் வேகம்
இதய துடிப்பை அதிகரிக்க செய்து
இனம்புரியா பரபரப்பை
என்னுள் உண்டாக்குகிறது.
என்ன கூற என்னை
அழைத்திருக்கிறாய்?
ஏதும் பருக எண்ணமில்லாது
பேச வார்த்தையில்லாது
வண்டி வண்டியாய் கேள்விகளை மனதிலே நிரப்பி
வழியோரம் விழிவைத்து
காத்திருந்த தருணத்தில்
தவம் கிடந்த பக்தனுக்கு காட்சி
தரும் கடவுள் போல
எனக்கு நீ காட்சி தந்தாயே
மழையில் மலர்ந்த மலரைப்போல புதியவளாய்
இன்று அவள்.
அருகே வந்து நின்றதும்
அவள் அழகியலை வர்ணிக்க
ஆயிரம் கவிஞர்களை கொணர
தோன்றுகிறது.
தொடர்ந்த மௌனத்தை கலைத்து
என் வினாக்களுக்கான
விடைதனை தன்
செவ்விதழ்களால் கூறினாள்.
"இனியும் என்னால் மறைக்கவும்
மறுக்கவும் இயலாது
மறுக்காது காதலை ஏற்றுக்கொள்" என்று.
தாமதிக்காது ஏந்திக்கொண்டேன்
அவளின் விழியோர நீர்த்துளி
மண்ணில் வீழாதபடி.