மனிதன் என்னும் சில மிருகம்
போலியான
உறவுகளைப்
போற்றி...
உண்மையான
மனதினை
உதாசினப்படுத்தும்..
உயரே பறப்பது
பட்டமா...பருந்தா
என்று தெரியாமலேயே
கருத்து சொல்ல வரும்..
அப்படியா என்று
கேட்டுக்கொண்டு
இரசியங்களை
அவிழ்த்து
அம்மணமாக்கும்..
உதவிகள்
செய்வோரை
முதுகில் குத்திவிட்டு
உயரே பறக்க முயலும்..
எவ்வளவு உயரம்
பறந்தாலும்
தரை இறங்கிதான் ஆக
வேண்டும்
என்பதனை
மறந்து...
ஆகாயத்தில்
கோட்டைக்கட்டும்..
மெத்தப்
படித்திருந்தாலும்
பிறரைக் கண்டால்
மெத்தனமாகவே
எண்ணும்...
பணம் பணம்
என்று அல்லாடும்..
பிறர் மனம்
அறியாமல்
வசைப்பாடும்...
துரோகங்களில்
பழகிவிட்டு
பல உயிர்களை
காவு வாங்கும்..
பிறர் துயர்கண்டு
குதூகளிக்கும்..
ஆறுதல் கூறுவதாய்
இன்னும்
காயப்படுத்தும்..
பாவங்களை
பாயாசமாய்
ருசித்து உண்ணும்..
பாசத்தை பருகாமல்
பாவியாய்
அலையும்..
ஆறடியில்
முடிந்திருமடா
வாழ்க்கை
எனும் தத்துவத்தை
உணராமல்
தரணியையே
விலைபேசும்..
மரித்த மனிதத்துடன்...
மனிதன் என்னும்
போர்வைக்குள்
வாழும் சில
மிருகம்!