கருவனக் கண்ணழகி
மை பூசியே என்னை உன்
கருவனத்திற்குள் சிறை பிடித்து
உன் கண்ணை சுற்றி வர மைபோட்டு
பாதையையும் மறைத்துவிட்டாய்....
என்னாலும் வனம் துறந்து வர
முடிவில்லை......
உன் விழியே கருவனமாயிற்றே எவ்வாறு என்னால் முடியும்?
இருப்பினும் சுகம் கண்டேனடி.....