காதலால் நான்

புரிதலின் புரிதலால்
பிரிவு குறையுமாம்
குறைகிறதோ என ஐயம்
நம் பிரிவல்ல ...
நீ என்மீது காட்டும் பரிவு
எல்லா வலியும் வலியல்ல
நீ கொடுக்கும் வலிபோல்
சுமக்கவும் முடியாமல்
இறக்கவும் முடியாமல்
விழி பிதுங்கி காதலில் நான்
காதலால் நான் ......

எழுதியவர் : ருத்ரன் (14-Oct-17, 11:30 pm)
Tanglish : kaathalaal naan
பார்வை : 435

மேலே