நட்பு தூய்மையானது
ஏய் அயோக்கிய பயலே
நானும் பார்த்துக்கிட்டு இருக்கன்.
அந்த பெண் வலியில துடிச்சிட்டு வரா உன் கண் வேற எங்கயோ தப்பா போகுது.
அவளுக்கு நீ யாரு ?
தோழன்.
அடேய் தோழன்னா யாருன்னு தெரியுமாடா...
இன்னொரு தாய்...
தந்தை
இரண்டுமானது தான்டா
நண்பன்.
நட்புக்கே நீ ஒரு கலங்கம்.
நண்பன் என்றால் எப்படி
நடந்து கொள்ள வேண்டும் என்று
என் நண்பனை பார்த்து
தெரிந்து கொள்.
ரொம்ப நன்றிங்க.
வலியில துடிச்சிட்ருந்தன். எனக்கு
இவனோட பார்வையோட அர்த்தம் விளங்கல.
நான் என் தாய் கூட இருப்பது போல் தான்
என் நட்பை
உயர்வாக நினைத்தேன்.
ஆனால் இவன் கேவலமானவன் என்று இப்பொழுது தான் புரிந்து கொண்டேன்.
அவ பேச்ச கேட்டு போகதடி.
ச்சீ போடா.பொறுக்கி
என் தோழிய எங்கிட்ட இருந்து பிரிச்சிட்டல்லடி.
உன் நண்பனை கொன்னு மொத்தமா உங்கிட்ட இருந்து பிரிக்கிறன்டி.
கனவுல கூட நடக்காது போடா...
என் உயிர் இருக்கற வரைக்கும்
என் நண்பனை உன்னால ஒன்னும் பண்ண முடியாது.
உன் கண் எதிரே
அவன் துடிக்க துடிக்க சாவான்.
ச்சீ பே...
என்னையா அசிங்கப்படுத்தின.
நாளைக்கு இந்த நேரம் உன் நண்பன் இருக்க மாட்டான்.
நானும் அமைதியா இருந்தா.விட்டா பேசிகிட்டே போற என்று
பளார் என்று கன்னம் சிவக்க அறைந்தாள்.
என்னடா
கன்னம் சிவக்க
இவ்வளோ கோபமா வர்ற.
பேருந்துல ஒரு பொண்ணு என்ன ரொம்ப அசிங்கப்படுத்திட்டாடா.
அவள பழி வாங்கணும்.
அவள தீத்துக்கட்டணுமாடா.
இல்ல.
நான் எப்படி வருத்தப்பட்றனோ
அத விட நூறு மடங்கு துடி துடிக்கணும்.
ஒரு நொடியில அவ சாகக் கூடாது.
அப்ப என்ன பண்ணனும்.
என் தோழிய எங்கிட்டருந்து பிரிச்சால.
மொத்தமா ஒரேயடியா அவ.தன் தோழன் தன் கண்ணெதிரே துடி துடிச்சு சாகறத பாத்து கதறி அழணும்.நண்பன நினைச்சு தினமும் அழுவா.தன்னால தான்
தன் தோழன் செத்துப்போனானு நெனச்சு நெனச்சு அவ நிம்மதியாவே இருக்க மாட்டா.
அத பாத்து நான் சந்தோசப்படணும்.
எப்படி சாகடிக்கலாம்.
கத்தியால குத்தி சாகடிச்சிடலாமா.
நீ தான் குத்தனனு எல்லாருக்கும் தெரிஞ்சிடும்.
அப்புறம் நீ ஜெயிலுக்கு போயிடுவ.
உன் சுதந்திரம் போய்டும்டா.
ஆமாம்ல.
இயற்கையாவே செத்தா மாதிரி இருக்கணும்.
ஆங் இந்த பாம்பு கொத்தி அவன் சாகறான்.
இந்த பாம்பு கடிச்சா.
அஞ்சு நிமிஷத்துல நாடி நரம்பெல்லாம் அடங்கி
துடி துடிச்சு செத்துடுவான்.
யாராலயும் காப்பாத்த வே முடியாது.
இதுக்கு மாற்றே கிடையாது.
நாளைக்கு அவன் சாகப் போறான். அவ கதறப்போறா.
நினைச்சாலே ரொம்ப சந்தோசமாருக்கு.
போய் தூங்குடா.
நாளைக்கு முதல் வேலையே அவன கொல்றது தான்.
காலை விடிந்ததும் பாம்பை எடுத்துகிட்டு கிளம்பிட்டாங்க.
இருக்கானாடா
இருக்கான்.
அவ.
இருக்காடா.
இங்கேயே போடலாமா
நிறைய பேரு இருக்காங்கடா.
பாம்பு சரியான ஆள கடிக்கணுமே.
ம்ம் அதுவும் சரி தான்.
பின் தொடருவோம்.
நூலகத்ல புத்தகம் படிக்கிறான் தனியா.
அவ எங்கே .அவ வெளியே ஊஞ்சல் ஆடறா.
இது தான் சரியான சந்தர்ப்பம்.
போட்ரு.
அவன் சாகறத பாத்து அவ கதறணும்னு சொன்ன.
அத நான் பாத்துக்கறன்.
அடியேய் பொண்ணே.
அடி கிடின்னு சொன்ன
பல்ல உடச்சிடுவன்.
நீ பல்ல உடைக்கறது இருக்கட்டும்.
அங்கே உன்னால ஒருத்தன் சாகப்போறான் பாரு.
ஏய்.போடி போ.
அவனுக்கு மட்டும் ஒன்னு ஆச்சு.உன்ன கொல்லாம விடமாட்டேன்டா.
ச்சீ பே.
நண்பா..
என்று கத்திக்கொண்டு உள்ளே பதறியடித்து ஓடினாள்.
பின்னால் பாம்பு நிற்பதை பார்த்து வாரி போட.
நண்பா ...என்று கத்தியபடி தள்ளிவிட்டாள் பாம்பை.
தள்ளும் பொழுது
பாம்பு கையை கடித்து விட்டது.
நண்பா
உனக்கு ஒன்றும் இல்லையே.
என்று கையை பார்த்தாள்.
எனக்கு ஒன்னுமில்ல டி.
உனக்கு ...
எனக்கும் ஒன்றுமில்லை.
கையை காட்டு...
கைய காட்டுடி ...
வலுக்கட்டாயமாக கையை பிடித்து பார்க்க
கையில் பாம்பு கொத்தி இருக்கிறது.
எனக்கு ஒன்றும் இல்லை நண்பா என்று வாயில் நுரை தப்பியபடி வாயில் இருந்து ரத்தம் வழிய கீழே சரிய
வெடுக்கென்று மடியில் ஏந்திக்கொண்டான்.
ச்ச உனக்கு பத்தி இவ சாகப் போறாளே...
எப்படியோ தொல்ல ஒழிஞ்சா சரிதான்.
ஏய்
உன்ன...
முதல்ல அங்க பாரு
அவ நெஞ்சடைச்சு செத்துடப்போறா...
ஆஆஆஆஆ....நண்பா...
வேண்டாம் நண்பா...
என்ன பண்ணுதுடி... கரத்தை இறுக்கமாக கோர்த்து
உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன் டி.
ஆ...ஆஆ.....நண்பா...
உன்ன.
வேண்டாம் நண்பா...
அவனை கொல்லாதே...
அவனுக்கு என் கையால தான் சாவு...
போ போய் அவன கொல்லு.
அவன கொன்னுட்டு ஜெயில்ல போய் உக்காந்துக்கோ...
நீ நல்லா வாழணும்டா...
நீ எப்பயும் நிம்மதியா...
சந்தோசமா இருக்கணும் நண்பா.
ஆஆ...
ஐய்யோ நான் அவன கொல்லமாட்டேன்.
வா ஆஸ்பிட்டல் போவோம்.
ஆ...ஆ...ஆ........
நண்பா...
வேண்டாம்...தூக்காதே வீண்...
நான் ஆழ்ந்த தூக்கத்திற்கு போறேன்..
நான் பொழைக்க மாட்டேன்.
அழாதே நண்பா...
எத்தனை சென்மம் எடுத்தாலும்
நான் உன் தோழியா
உன் கூடவே இருப்பன்டா...
கையை கத்தியால் கிழித்து கட்டு போட்டும்
உடல் முழுக்க விஷம் பரவிக்கொண்டே இருந்தது.
உடலுக்குள் ஓராயிரம் போர் நடக்க...
துடிக்கிறது உடல்...
உயிர் மெதுவாக அடைக்கிறது.
நண்பா...நண்பா.....
பிரபா ...என்ன விட்டு போய்டாதடி...
ஒன்னும் இவ சாகலையா...
என்னை தான் உன்னால கொல்ல முடியும்.
என் நட்பை உன்னால ஒன்னும் பண்ண முடியாதுடா.
பிரபா...பிரபா...
நண்பா ...
என்னை பார்த்து சிரித்தபடி இருந்தாள்.
முனகல் அடங்கியிருந்தது.
உடல் அசையவில்லை.
இமை இமைக்கவில்லை..
அவள் கண் என்னை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது.
அவள் கண்ணில் நான் மட்டுமே இருந்தேன்.
என் கண்ணில் அவள் மட்டுமே தெரிந்தாள்.
எங்கள் நெஞ்சில் என்றுமே மாறாத உண்மையான நட்பு மட்டுமே இருக்கிறது.
இறந்திருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டே
கையை பிடித்து பார்த்தேன்.
நாடி அடங்கியிருந்தது.
கை வேகமாக விழுந்தது.
தலை சாய்ந்தது.
வாயில் நுரை தப்பி ரத்தமும் நுரையும் வழிந்தது.
இப்பொழுது தானே
எப்ப பாரு புத்தகம் .
எனக்கு வந்து ஊஞ்சல் ஆட்டிவிடு என்று உரிமையாக கோபித்துக் கொண்டு போனாய்..
எழுந்திரு பிரபா...
ஊஞ்சல் ஆட்டி விடுகிறேன்...
நண்பா ...
நான் உன்னை விட்டு எங்கும் போகவில்லையடா...
நீ சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கிறேன்.
உன்னை சுற்றித் தான் இருக்கிறேன்.
நம் நட்பில் வாழ்கிறேன்.
ஆஆ...உன் மடியில் உறங்குகிறேன்
தாலாட்டு...
பின் நாம் சேர்ந்து ஊஞ்சலாடலாம்.
என்கிறது மௌனமான நேரம்....
~ உன் தோழி பிரபாவதி வீரமுத்து😊