இன்னும் ஓர் காதல் நிலம்

கருந்துழையின் விளிம்பில்
நுழைந்து
இந்த உலகின்
இன்னுமோர்
நேர்நிலை பிரபஞ்சத்தில்
நிஜமாகவே!
நாம் ஒன்றாய்
ஒரே வீட்டில்....
வரங்களை ஏனோ?
இங்கே தேடிக்கொண்டு...
வாடாத மலர்கள்
வேருக்கேற்ற மழை
கூசாத வெயில்
அணைக்கும் அளவு குளிர்;
பிறிந்து சிதறும்
ஒளியழையின் நுகர்வுள்
காதலும் காமமும்
என்னுள்ளின்
நுனியில்...
காலச்சக்கரத்தின்
திசை மாற்றுவோம்
நீயும் நானும்...
உள் விழும்
ஒளி திரும்பா
ஓர் நிலையில்?

எழுதியவர் : சுரேஷ் குமார் (15-Oct-17, 11:10 pm)
பார்வை : 87

மேலே