விழி பாடும் மொழிகள்
திருக்குறள்
படித்துக்கொண்டிருந்தேன்
அறத்துப்பாலையும்
பொருட்பாலையும்
பொறுப்பாகப் படித்துவிட்டேன்
அதன் பிறகு
என் புத்தகம் கைதவறித்
தண்ணீரில் விழுந்துவிட்டது
போகட்டும் விடு
நீ ஒருமுறை
உன் கண்களைத் திறந்து
என்னை பார்
எஞ்சியுள்ள
காமத்துப்பாலையும் கடந்துவிடுகிறேன்

