இவையெல்லாம் செய்வாயா
சில்லெனும் வீசும் பூங்காற்றே அவள் மூச்சு காற்றை
என் சுவாசம் விட்டு செல்லாதபடி புதைந்து கொள்வாயா
கட கடவென கடக்கும் நிமிடங்களே
அன்னையுடன் இருந்த நாட்களை திருப்பி சுழற்றுவாயா
மெதுவாய் என்னை சுடும் சூரிய ஒளியே
இரவில் குளிருக்கு இதம் தருவாயா
தவறாய் நான் விட்ட வார்த்தைகளே
தவறாய் உணர்ந்த பின்பு மீண்டு என்னுள் வருவாயா
சுவைத்து நான் விழுங்கிய அறுசுவை உணவே
வாடி கிடைக்கும் என் நேச உறவுகளின் வயிற்றை நிறைப்பாயா
காற்றில் விட்டால், தீயில் எரித்தால். மறையும் பண காகிதமே
உனக்கான வாழ்க்கையை உழைப்போரிடம் சேர்ந்து வாழ்வாயா
அழிவை தவணை முறையில் விலைக்கு தரும் மதுவே
ஆண்களின் வாழ்க்கையில் இருந்து கொஞ்ச விலகி கொள்வாயா
மரணம் வரை மணந்த மாதுவை கொஞ்சம் கொஞ்சி மகிழ மழலைகளோடு
நொடிகள் தவறாத கடிகாரமே நோய் நொடியில் இருப்போருக்காக கொஞ்சம்
தவந்து செல்வாய மரணிப்பதற்குள் உறவுகளுடன் மகிழ்ந்து செல்ல
விலை இல்லாமல் தினம் கிடைக்கும் கண்ணீரே இன்று ஒரு நாள்
உன் தினசரி வாடிக்கையாலுனுக்காக தள்ளுபடி செய்வாயா
அன்பை எதிர் பார்க்கும் மனிதர்களுக்காக ஆண்டவனே கடிதம் ஓன்று எழுதி அனுப்புகிறேன்
அன்னை தெரசாவின் உயிர் பறிப்பை கொஞ்சம் மறு பரிசீலனை செய்வாயா
மழையை அனைத்து நெஞ்சுள் புதைத்து கொள்ளும் தாய் மண்ணே
பாலையில் விக்கும் உயிர்களின் சத்தம் கேட்டல் கொஞ்சம் தாகம் தீர்ப்பாயா