அவள் ஒரு தேவதை

பகலில் மத்தாப்பு
கொளுத்துவது
யார் என்று பார்த்தேன்
நீ எதிர்வீட்டு குழந்தைகளுடன் சிரித்து கொண்டிருந்தாய்...
†*******†***********†********†*********†
பட்டாம்பூச்சிகளெல்லாம் ஏன் உன்னையே சுற்றிவருகிறது
அதுவா பூக்களில் தேன் தீர்ந்துப்போனதாம்
†*******†***********†********†*********†
உனக்கு மௌனம் பிடிக்கும்
என்பதாலே என் காதலையும் உன்னிடம் மௌனமாகவே சொன்னேன் கேட்டதா...?
†*******†***********†********†*********†
உங்கள் தெருவின் சாக்கடை
கூட பூக்கடைப்போல் வாசம்
வீசுது... உன் மேனிப்பட்டு
வெளியேறும் நீரின் மகிமையோ...
†*******†***********†********†*********†
வெறும் காற்று உன் முகத்தோடு
மோதினால் அதுவே பூங்காற்று
†*******†***********†********†*********†

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (17-Oct-17, 9:37 am)
Tanglish : aval oru thevathai
பார்வை : 1028

மேலே