கூடுகள் தேடும் பறவைகள் தீபாவளி கவிதை

நீண்டு கிடக்கும் சோக பாதையில்
நெளிந்தே வளைந்தும் போகின்றான்
வேண்டும் கடவுள்கள் எல்லாம்
வேடிக்கை மட்டும் பார்க்கிற தாம்
ஆண்டுகள் தோறும் வந்தே நிற்கும்
அதையே தீபாவளி என்றழைப்போம்
தீண்டா இன்பம் தேடும் ஏழைக்கோ
தீபாவளி விழா தீரா ”வலியாகும்”


மாடுகழனி வயல் வெளியெலாம்
மாமாங்கமாய் வறண்டு நின்றதே
ஆடுகள் கோழியும் கால் நடைகள்
அவைகள் தின்னவே புற்களில்லை
நாடுதான் செழிக்கிற தென்றேதான்
நம்பெருமை பேசியே மகிழ்கிறோம்
கூடுகள் தேடும் பறவைகள் போல
குமைந்து கிடக்கின்றார் வறுமையிலே

எல்லாம் நலமும் இவர்கள் பெற
எவர்தான் நன்மை செய்வா ரென்றே
எல்லாம் வல்ல இறைவ னையே
இறைஞ்சி நின்றும்வழிதா னில்லை
வல்லவன் மேலே மேலே உயரவே
வழியில்லாத வனோ ஏங்கு கின்றான்
நல்லதொரு தீபாவளியில் எல்லார்
நலமும் பெருகிவிடின் மகிழ்வுதானே!

கவிஞர் கே. அசோகன்.

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (17-Oct-17, 1:01 pm)
பார்வை : 179

மேலே