மாறுதல்கள்

அழகான பொம்மைக்கு ஆசைப்பட்டேன்
என்னை ஏமாற்றியது அந்த பொம்மை
நான் ஏழை என்ற காரணத்தினால்
மாற்ற தொடங்கினேன் என் ஆசைகளை....

அறுசுவையாய் உண்ண நினைத்தேன்
ஏதும் இல்ல அடுப்படியில்
என்ன தான் செய்வாள் என் தாய்
மாற்ற தொடங்கினேன் என் சுவையை

புது ஆடை கேட்கும் பண்டிகைகள்
ஓரமாய் நின்றேன் தையல் கடையில்
கிழிந்த என் ஆடைக்கு ஒட்டு போட
மற்ற தொடங்கினேன் என் பண்டிகைகளை...

பள்ளி செல்லும் வழியில்
முள் கிடந்த போதெல்லாம்
பழகி கொண்டேன் என் பாதங்களை
மற்ற தொடங்கினேன் என் பாதைகளை...

கடந்து வந்த பாதையில்
என்னால் மாற்றவும் மறக்கவும் முடியாமல் போன
ஒரு சில சூழ்நிலைகளும் மனிதர்களும்
என்றும் வடுக்க்லாய் என் வாழ்க்கை முழுவதும்

எல்லாம் மாறும் சூழ்நிலை வந்தாலும்
மாறாத ஒன்று
என் ஏமாற்றங்கள் மட்டும் தான்
ஏமாறும் விதங்களும்
ஏமாற்றும் மனிதர்களும் மட்டும் தான் மாறின....

கசப்பான மாறுதல்கள் மட்டும் கண்ட
என் உள்ளம் மாறுதல்களை ஏற்க தயங்குகிறது
என்று மாறும் மாற்றங்கள்....

எழுதியவர் : நான் (17-Oct-17, 1:11 pm)
சேர்த்தது : Kavitha
Tanglish : maruthalkal
பார்வை : 72

மேலே