சிநேகிதனே -அத்தியாயம் - 08

...சிநேகிதனே....

அத்தியாயம் : 08

அவன் குடும்பம் குழந்தையென்று சந்தோசமான வாழ்க்கையை வாழ வேண்டுமென்றே அவனை விட்டு விலகிச் சென்றேன்...ஆனால் அதை நேரடியாக காணும் போதோ மனதை மகிழ்ச்சியை விட துக்கமே அதிகமாய் ஆக்கிரமித்துக் கொண்டது...

"என்னாச்சு மித்ரா...உன்னோட கண்களில சந்தோசத்தை விட கவலையே அதிகமாய் தெரியுது....வேண்டாம்னு விட்டிட்டுப் போனவன்,இப்போ இன்னொருத்திக்கு சொந்தமாகிட்டான் என்றதை ஏத்துக்க முடியலையோ...??..."

"நான் இப்படியொரு வாழ்க்கை வாழனும்னுதானே மித்ரா ஆசைப்பட்ட...அப்புறம் ஏன் உன்னால சந்தோசப்பட்டுக்க முடியல...??.."

அவன் சொல்வதெல்லாம் உண்மைதான்...அவன் இப்போது இன்னொருத்திக்கு உரிமையானவன் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல்தான் என் மனம் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது..

"உனக்கு...உனக்கு எப்போ கல்யாணமாச்சு..?எனக்கு சொல்லனும்னு கூட உனக்குத் தோனலையா சரண்...??.."

"நீதான் ஒரு குட்பை கூடச் சொல்லாம என்னை தன்னந்தனியா விட்டிட்டுப் போனியே...உனக்கு ஏன் நான் சொல்லனும் மித்ரா...??.."

"நம்ம அஞ்சு வருச நட்புக்காவது மதிப்பு கொடுத்து எனக்கு நீ சொல்லியிருக்கலாமே சரண்...??.."

"அந்த உறவவை கொஞ்சம் கூட மதிக்காம போன நீயா மித்ரா இப்படியெல்லாம் பேசுற...அழைப்பிதழ் கொடுத்து அழைக்கிற நிலைமையிலா நீ நம்ம உறவை விட்டிட்டுப் போன...??..."

"நான் என்ன சொன்னாலும் அது உனக்குத் தப்பாத்தான் தெரியுது சரண்...ஆனால்

"நீ கல்யாணம் செஞ்சுகிட்டதில உன்னைவிட எனக்குத்தான் ரொம்ப சந்தோசம்னா நீ நம்பவா போறாய்...??நீ எப்பவுமே சந்தோசமா இருக்கனும் சரண்...அது மட்டுமே எனக்குப் போதும்...

"ஹ...சந்தோசம்...அப்போ நான் சந்தோசமா இருந்தா உனக்குப் போதும்...அப்போ அந்த சந்தோசத்தை நீ பார்க்க வேண்டாமா மித்ரா...??.."

அவன் எதைச் சொல்கிறான் என்று புரியாமல் அவனையே புரியாத பார்வை பார்த்தேன்..அவன்தான் என் மனதைப் படிக்கும் வித்தைக்காரனாய் இருந்தானே..

"என்ன நான் எதைச் சொல்றேன்னு புரியலையா...?என்னோட சந்தோசம் என்னுடைய மனைவியும் மகளும்தான்....அவங்களை நீ பார்க்க வேண்டாமா மித்ரா...??"

"அவனுடைய மனைவியை எப்படி என்னால் எதிர்கொள்ள முடியும்...அவர்கள் இருவரையும் இணைத்து கற்பனையில் கூட என்னால் பார்க்க முடியவில்லையே....இதில் நேரில் எப்படி சந்திக்கப்போகிறேன்....?.."சிறிது நேரம் எனக்குள்ளேயே பல கேள்விகளைக் குடைந்து யோசித்த நான்...

"உன்னுடைய மனைவிக்கு என்னைப்பத்தி தெரியுமா...??.."

"அவளுக்கு எல்லாமே தெரியும்..."அந்த "எல்லாமே"என்பதில் ஓர் அழுத்தம் கொடுத்தே சொன்னான்...

"ஓஓஓ..."நான் போட்ட "ஓஓ"வில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்ததை அவன் உணர்ந்திருக்க வேண்டும்..அதனால்,

"உன்னை சந்திக்கனும்னு அடிக்கடி சொல்லுவாள்....இன்னைக்கு உன்னைப் பார்த்தா நிச்சயம் அவள் சந்தோசப்படுவாள்...."

என்னை சந்திக்க விரும்பிய அவன் மனைவியை நானும் சந்தித்தே ஆக வேண்டுமென்று அப்போதே முடிவு செய்து கொண்டேன்...

"..ம்ம்...நானும் சந்திச்சே ஆகனும்..."

"இப்போவே வா...நான் கூட்டிட்டுப் போறேன்...நீ வந்த காரைத் திருப்பி அனுப்பிடு..."

"இப்படியேவா...??.."

அவள் ஏற்கனவே விமான நிலையத்திலிருந்து அப்படியே வந்திருந்தாள்...இதில் அழுது வடித்த முகம் வேறு...

"ஓஓ...ஓகே...நீ ஹோட்டல்ல ஏதும் ரூம் புக் பண்ணியிருக்கியா...இல்லை இனிமேல்தானா...??.."

"இல்லை ஏற்கனவே பதிவு செஞ்சிட்டேன்...நீ இங்கேயே வெயிட் பண்ணு நான் போய் ப்ரஷாகிட்டு வந்திடுறேன்..."

"எந்த ஹோட்டல்...??

"டொல்பின்..."

"அதை தான்டித்தான் என்னோட வீட்டுக்குப் போகனும்...சோ நீ என்கூடயே வா...??.."

அவன் என் பதிலிற்கு கூட காத்திருக்கவில்லை...எனைக் கடந்து வாசலை நோக்கிச் செல்லத் தொடங்கினான்...நானும் அவனைப் பின் தொடர்ந்து சென்றேன்...

நான் வந்த காரின் ஓட்டுநரிடம் ஏதோ சொன்னவன்,எனது பைகளை அவனது காருக்கு மாற்றிவிட்டு என்னைத் திரும்பிப் பார்த்தான்...

"இந்த பார்வைக்கொன்னும் குறைச்சலில்லை...ஒன்னு பேசியே கொல்ல வேண்டியது...இல்லைன்னா இப்படி பார்த்தே பஸ்ப்பமாக்க வேண்டியது..."

"என்ன அங்க முணுமுணுப்பு...வந்து காரில ஏறு..."

அவன் சொன்னதும் வேகமாகச் சென்று காரின் பின்கதவினைத் திறந்து ஏற முற்பட்டேன்..உடனே அவன்,

"ஹலோ மேடம்...நான் ஒன்னும் இங்க உனக்கு டிரைவர் வேலை பார்க்க வரல...ஒழுங்கா வந்து முன்னால ஏறு...உன்னை இங்க யாரும் கடிச்சு தின்னிட மாட்டாங்க.."

என்றவாறே முன் கதவினைத் திறந்து விட்டவன்...தனது இருக்கையில் அமர்ந்து காரை ஸ்டாட் செய்து கொண்டான்...

நானும் அவனோடு இதற்கு மேலும் சண்டையை வளர்க்க விரும்பாததால் முன்னே ஏறி அமர்ந்து கொண்டேன்...கார் வேகமெடுத்துப் பறந்தது...

பத்து நிமிடத்திலேயே ஹோட்டலை வந்தடைந்துவிட்டோம்...அதுவரையில் அவனும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை...நானும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை...மௌனம் மட்டுமே நம்மை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தது...

தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (17-Oct-17, 9:44 pm)
பார்வை : 473

மேலே