பொல்லாதோர் உலகம் நல்லோர்க்கு கடினம்

17 .10 .2017 இன்று மாலை
ஐந்து மணி அளவில் சென்னை வேளச்சேரி வீட்டில் இருந்து ஈஞ்சம் பாக்கம் விமலா
கார்டன் இசை வகுப்பிற்கு பயணமானேன் .என் வீட்டில் இருந்து மெயின் சாலை சென்று பின்பு நோ யு டர்ன் போர்டு இருக்கும் அருகில் மக்கள் கூட்டமாக திரும்பி கொண்டிருக்கும் போது , அவசரத்தில் நானும் திரும்பலாம் என்று காத்திருக்கும் போதில் ஐந்து பர்லாங் சாலையில் இருந்து வந்த வாகனங்களில் ஒரு ( ஓலா ) வாகனம் வேகமாக திரும்ப எதிர்பாராத விதமாக அதன் பின் பகுதி என்

இரு சக்கர வாகனத்தின் முன் டயரில் உரச காரின் பின் பகுதி கிளிப் கழண்டு விட்டது . இதை கண்டு
அக்க்காரை ஓட்டிய ஓட்டுநர் உடனே காரை நடு ரோட்டினில் நிறுத்த அந்நேரம் பார்த்து வேறு ஒரு இரு சக்கர வாகனம் தன் வாகனத்தை நிறுத்த முயலாமல் காரின் பின் பக்கத்தில் இடித்து விட்டார் . அந்நேரம் பார்த்து நானும் நான் தவறு செய்யவில்லை என்று எடுத்து சொல்ல என் வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு ஓலா ஓட்டுனரிடம் பேச சென்றேன் . நான் நின்று பேசியதால் தவறு நீங்கள் தான் செய்தீர்கள் என்று என்னை கேள்வி கேட்டு காரின் பின் பகுதி ஒடிசலுக்கெல்லாம் நீங்கள் தான் முழு காரணம் என்று பேச ஆரம்பித்து விட்டார் ,

என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தேன் ,அருகில் நின்ற போலீஸ் உதவி போக்கு வரத்து காவலரிடம் முறையிட்டேன். அவரோ பேசி தீர்த்து கொள்ளுங்கள் என்று சொல்ல ,நானும் அந்த ஓலா கார் ஓட்டுனரிடம் பேசி பார்த்தேன். அவரோ வேண்டுமென்றே என்னை இதில் சிக்கவைத்து தன் காரின் பின் பகுதி புழுமையான பழைய பகுதி பாகத்தினை மாற்றிக்கொள்ள ஆசைப்பட்டு குற்ற பதிவுக்கு அழைத்து சென்று விட்டார் என்னை .

உண்மை என்ன வென்றால் நான் அவரை இடிக்கவில்லை என்பது தான் .நான் இடித்து விட்டேன் என்று அவர் சொன்ன அந்த இடம் முன்பே பழுதான இடம் வெறும் கிளிப் கழன்றதற்கு ஒரு நல்ல மனிதனை மொத்த குற்றத்திர்ற்கும் பொறுப்பேற்கும் படி இன்றைய காலத்தை அவர் பயன்படுத்தி கொண்டார் .விழி பிதுங்கி நின்றேன் .விடை யார் சொல்லுவார் என்றே நொந்து போனேன் .

நானும் அரசியல் தெரிந்து எனக்கும் ஆள் பலம் இருந்திருந்தால் நிலை எப்படி இருந்திருக்கும்
அப்படி எனக்கு யாருமில்லை ,காரின் பின் பகுதியில் இடித்த வாகனம் மறைந்து விட்டது இடிக்காத நான் இப்போது இடித்தவனாகிவிட்டேன் .விந்தையிலும் விந்தை ,வாழ்வு நமக்கு நல்லுதவி தந்தாலும் வாழும் மனிதர்கள் அதை தட்டிப்பறித்து விடுகிறார்கள் .

இதே செயல் எனக்கு நேர்ந்து இருந்தால் நான் உடனே பரவாயில்லை என்றுரைத்து விட்டு என் வேலைக்கு பயணமாகி இருப்பேன் ,ஆனால் இவரோ ஆசை மிகுதியால் .ஆணவ மிகுதியால்
எண்ணெய் வைத்து இன்பம் காணும் வழியினை தேடிக்கொண்டார் .

வேலையற்று வேதனையுற்று விந்தை உலகை அலகை சூழ்ந்துள்ளதை எண்ணி மனம் குமுறுகிறேன் .இறைவன் நன்மைக்கு மட்டும் செவி சாய்க்கும் குணம் உடையவர் என்பதால் அவரிடம் வந்து நொந்து அழுது தொழுதேன் ,என்னிடம் ஏமாற்று பவர்களை விட்டு விட மாட்டார் என் இறைவன்
சட்டம் அவர்களுக்கு சாதகமாக இருந்தாலும் இறை தண்டனை கட்டாயம் அவர்களுக்கு கிடைக்க யாசிக்கிறேன் .ஏனினினில் அவர் பொய் சொல்லி பண்பை கிழித்து இல்லாததை இருப்பதாக கூறி
நல்ல என் மனதை அலைக்கழிக்க செய்து விட்டார் .

இறை தண்டனை வேண்டாம் அவர் திருந்த வாய்ப்பு அளிக்க வேண்டுகிறேன் என்று
முடிக்கிறேன் இன்றைய இந்த மனம் பதைத்த நிகழ்வை .

எழுதியவர் : சி .எம் . ஜேசு (18-Oct-17, 12:18 am)
பார்வை : 151

மேலே