பெண்ணே நீ பேரழகு

மலர்ந்த முகமழகு மாறாத குணமழகு
மயக்கும் கண்ணழகு வடிவில் சிலையழகு
தயக்கம் கொள்ளாமல் பேசும் பேச்சழகு
சிலிர்க்க வைக்கும் தேவதைப் பெண்ணழகு
சிவந்த இதழழகு சிரித்தால் முத்தழகு
மின்னும் உடையழகு மெல்லிய இடையழகு
பின்னிய சடையழகு நடந்தால் நடையழகு
கொலுசுடன் காலழகு கொஞ்சும் மொழியழகு
மண்ணிற் பிறந்த பெண்ணேநீ பேரழகு
உந்தன் வருகையால் இவ்வுலகம் பேரழகு

இத்தனை அழகும் ஒன்றாய் சேர்ந்து
என்னைத் தாக்க இன்பம் கண்டேன்
கண்ணே வா கனியமுதே ஓடிவா
முத்தே வா முத்தழகே ஓடிவா
எண்ண மெல்லாம் நிறைந்த என்னவளே
வண்ணக் காதலோவியம் வரையலாம் வா
கனவினில் வருகின்ற தேவதை பெண்ணே
நனவினில் காதல்மழையில் நனையலாம் வா
காதற் கனியே காலம் முழுக்க
காதல் செய்வோம் அருகில் வா

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (18-Oct-17, 9:41 am)
Tanglish : penne nee perazhagu
பார்வை : 540

மேலே