இரவு தூங்கும் நேரம்

மரங்களெல்லாம் காற்றினில் அசைந்து ஆட
..... மல்லிகை மணத்தோடு தென்றல் வீச
விரித்திருந்த மெத்தையிலே தலையை சாய்த்தேன்
..... மின்னுகிற மாணிக்கச் சிலையைப் போல
சிரிக்கிற முகத்துடன் கனவில் வந்தாள்
..... சிந்தையை மயக்கியே முத்தம் தந்தாள்
இரவினில் தூங்குகிற போதும் எந்தன்
..... இதயத்தி னுள்புகுந்து இன்பம் தந்தாள்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (18-Oct-17, 9:43 am)
பார்வை : 283

மேலே