காதல் கடிகார முள்

கவிதை எழுதுவதில்
நொடிமுல்லாய்ப் பறந்தாலும்
காதல் கடிதம் என்றால்
நிமிட முல்லாய்
நின்று நிதானித்து
மணிமுல்லாய்
மரித்துப் போகும்.

அருவியாய் எழும் வார்த்தைகள்
காதல் கடிதம் என்றால்
அயிரை மீன்களாய்
கைநழுவிப் போகும்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (18-Oct-17, 4:47 pm)
பார்வை : 198

மேலே