சகோதரியின் திருமணம்
கல்லூரி எனும் கலைக்கூடத்தில்
கண்கள் தவம் புரிந்து
தத்தெடுக்கும் சில உறவுகளின் மத்தியில்
நாம் தானக தேர்ந்தெடுத்தோம்!
சகோத(ரி)ர உறவை!!,
பயணங்கள் எங்கோ
தோன்றிய போதும் "பாசம்"
இங்கே வளரத் தொடங்கியது,
சமையல் அறைகள் இரண்டான
போதும் அதனை
பகிர்ந்து கொள்ளும் இடம்
ஒன்றாக இருந்தது,
உடல்கள் வெவ்வேறாக இருந்தும்
சகோதர உணர்வு
ஒன்றாக இருந்தது,
தம்பி என்றும்
தமக்கை என்றும்
யாரும் அழைத்துக் காட்டவில்லை!
இருந்தும்
உறவுகளை நாமே
அறிந்து கொண்டோம்,
உறவுகள் பிறக்க தொடங்கியது!
உரிமைகள் வளர் தொடங்கியது!!
எதையும் தவறாக பார்க்கும் "சமூகம்"
நம்மை மட்டும்
சரியாக பார்த்தது!!!,
மூன்று ஆண்டுகள் முடிந்தது
பிரியும் நேரம் வந்தது
அப்போதும் ஒன்றை
புரிந்து கொண்டோம்,
கிளையில் பூக்கும் பூக்கள்
கிழக்காக இருந்தாலும்
மேற்காக இருந்தாலும்
கீழ் இருககும் வேர்கள்
ஒன்றுதானே!
பார்க்காத அளவில் இருக்கும்
"சகோதரி நினைவு"
நெஞ்சை விட்டு நீங்குமா?!
இல்லை
சகோதரன் உறவு
சரிந்து போகுமா?!,
எங்கு இருந்த போதும்
என்றேனும் ஒருநாள்
ஒன்று சேர்வோம்
என்று இருந்தோம்!
அது இன்று
நிறைவேறத் தொடங்கியது!!,
அன்னைக்கு அடுத்து அக்கா என்று
அழைத்த நானும்
தந்தைக்கு அடுத்து தம்பி என்று
என்னை அழைத்த நீயும்
ஒர் உடலில்
பிறக்கவில்லை என்றாலும்
ஒரே உறவில்
தானே வளர்ந்தோம்!!,
உறவில் வளர்ந்த நாம்
உள்ளத்தால் மகிழும் நிகழ்வு
நிகழ்ந்தது!
மணமேடை ஏறி
மனம் மகிழும் நாள்
உனக்கு வந்தது!
அதை
மனதால் வாழ்த்த
அழைப்பு எனக்கு வந்தது!!,
வருகிறேன் நானும்
வாழ வேண்டும் நீயும்,
மணம் முடித்து செல்லும்
உன் வாழ்வு மணம் வீச,
விரல் பிடிப்பவர் விருப்பம் போல்
நீ விரும்பி வாழ,
வாழ்க்கைத் துணையாக வருபவர்
வசந்தத்தின் துணையாக வர,
நண்பன் என்று முதலில்
முன் நின்று வாழ்த்துகிறேன்!
தோழன் என்று
தொடர்ந்து வந்து வாழ்த்துகிறேன்!!
சகோதரன் என்று
சமமாக வாழ்த்துகிறேன்!!!
இப்படிக்கு
----- சகோதரன்------