சக்கர நாற்காலி Wheelchair

மனிதன் பிறந்த சில மாதங்களில் தத்தித் தத்தி, இரு கைகளையும் இரு கால்களையும் பாவித்து தவழ்கிறான் . ஒரு வயதானபோது நிமிர்ந்து இரண்டு கால்களில் பாவித்து மனிதன் நடக்கிறான், ஓடுகிறான், பாய்கிறான், ஆடுகிறான். வயது எழுபதைத் தாண்டியவுடன் கைக்கோலை ஊண்டி மூன்று கால்களில் நடக்கிறான் மனிதனின் வயது ஏற வியாதிகள் காரணத்தால் கோல் பிடித்து அவனால் நடக்கமுடியாது வோக்கரை பாவிக்கிறான். சிலர் கால்களை சக்கரை வியாதியால் இழந்து விடுகிறார்கள். சக்கர நாற்காலியின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.. இந்த சக்கர நாற்காலியின் கதையிது

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், ஸ்டோர்ரூமில், ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கும் மின்சக்தியில் இயங்கும் சக்கர நாற்காலி, அமெரிக்க டாலர்கள் 3000 க்கு ராஜாவால் வாங்கப்பட்டது. ராஜா ஒரு பணக்கார வியாபாரி. மூன்று மருந்து விற்கும் கடைகள், ஒரு மருத்துவ ஆய்வகம் அகியவற்றின் உரிமையாளர் அவரது தாயார் ஜானகி. அவரது வாழ்க்கையில் வெற்றிக்கு வித்திட்டவள். அகவே தாயை இறுதி வரை கவனிக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது. ஜானகி ஒரு பணக்காரப் பெண். படித்தவள். திருமணம் செய்து பத்து வருடங்களுக்குள் ஒரு கார் விபத்தில் மருத்துவரான கணவரை அவள் இழந்தது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம் . ராஜா அவளின் ஒரே மகன். அவனுக்கு தகப்பன் இறக்கும் போது வயது எட்டு. ஜானகி நிலை ஓன்று நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவள், அவளின் தந்தையும் அந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர் ஐந்து படுக்கையறைகள் கொண்ட பங்களாவை இரண்டு ஊழியர்களின் உதவியுடன் அவள் பரிபாலனம் செய்தாள். வீட்டுக்குப் பின் ஒரு மலர் தோட்டம். அது அவளால் உருவாக்கப்பட்டது. அதை அவளே கவனித்துக் கொண்டாள். அவளது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த டாக்டர்கள் அவளுக்கு ஆலோசனை சொன்னார்கள், ஆனால் அவள் அதை அலட்சியம் செய்தாள். அவளுடைய போக்கினால் அவளது மகன் ராஜாவுக்கு பெரும் கவலை.
“ அம்மா டாக்டர் சொன்னபடி உன் உணவில் கவனம் செலுத்து. நீரிழிவு வியாதி கடைசி காலத்தில் உனக்கு பிரச்னைகளைத் தரும்: என்றான் ராஜா
ஒரு நாள் வீட்டுத் தோட்டத்தில் ஜானகி வேலை செய்யும் போது இரு கால்களிலும் கல் அடித்ததினால் காயம் ஏற்பட்டது . அதுவே ஆரம்பம் . காயம் மாறவில்லை. சீழ் பிடித்து பெறிதாகியது.. இது கடுமையான நிலையை அடைந்தது. நீரிழிவு நோயுக்கு அவளது புறக்கணிப்பால் அவள் இரண்டு கால்களின் பாதங்களை இழக்க வேண்டி வந்தது . மகனின் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள முடியாததால் அவள் மனச்சோர்வடைந்தாள். ராஜா ஒரு மருத்துவ மார்ட்டில் ஒரு விலையுயர்ந்த மின்சக்தியில் இயங்கக் கூடிய சக்கர நாற்காலியை வாங்க முடிவு செய்தார். இது ஒரு பேட்டரியில் இயங்கக் கூடயது, மணிக்கு ஆகக் கூடிய அதன் வேகம் பத்து மைல்கள் அதன் வேகத்தை கூட்டிக் குறைக்க முடியும் . ஜானகி எந்த ஒருவரினதும் உதவியும் இல்லாமல் சக்கர நாற்காலியில் செல்ல முடியும்., மாலையில் பூங்காவிற்கு அந்த சக்கர நாற்காலியில் தாயை ராஜா தினமும் அழைத்தச் செல்வார் .
ஜானகி தன் உடல்நிலை பற்றி சிந்தித்ததால் மனத் தளர்ச்சி ஏற்பட்டு பின் , அல்சைமராக மாறியது, சக்கர நாற்காலியை அவளால் பிறர் உதவி இன்றி இயக்க முடியவில்லை . ஒரு நர்ஸ் வீட்டிற்கு தினமும் வந்து ஜானகியின் தேவைகளை கவனித்தாள். குளிப்பாட்டினாள் ஜானகியை தினமும் காலையும் மாலையயும் இரண்டு முறை ராஜாவும், அவளுடைய மகன் கஜனும் சக்கர நாற்காலியில் சுவாசமான தூய காற்றுபெற பூங்காவுக்கு அழைத்துச்செல்வார்கள் ஒரு கட்டத்தில் அவள் கட்டிலை விட்டு எழும்ப முடியத நிலையை அடைந்தாள் அதன் பின் சில மாதங்கள் மட்டுமே அவலள் வாழ்ந்தாள்.
வீட்டிலுள்ள சக்கர நாற்காலி மேல் ராஜவின் மனைவி மாதவிக்கு எதோ ஓரு வெறுப்பு. அதில் மாமியாரை வைத்து ஒரு போதும் பூங்காவுக்கு அவள் அழைத்துச் சென்றதில்லை. . , ஊனமுற்றவர்களை சுமக்கும் அந்த, உபகரணம் வீட்டிற்கு வந்ததில் இருந்து கெட்ட துறதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதாக அவள் தன் , நண்பர்களுக்கு அடிக்கடி சொல்லி முறைப் பட்டாள்.
"இது ஒரு ரிமோட் கண்ட்ரோல் சக்கர நாற்காலியா? விலை அதிகமாக இருக்குமே " அவளது சினேகிதி சிவகாமி மாதவியைக் கேட்டாள்
"ஆமாம், அது ஒரு விலையுயர்ந்த சக்கர நாற்காலி, இரண்டு பாதங்களையும் இழந்த என் மாமி நினைத்த இடத்துக்குப் போக என் கணவர் இதை வாங்கினார்” மாதவி சொன்னாள்
"இதன் விலை என்ன மாதவி “?
"நான் நினைக்கிறேன் 3000 டாலர்கள் என்று. இது மின் சக்தியில் இயங்கக் கூடியது. வேகத்தை மாற்றிக் குறைக்கும் வசதி உண்டு ஷாப்பிங் பொருட்களை வைக்க ஒரு பை. உண்டு. இதை இயங்கும் போது இசையும் கேட்கலாம் "
"அது ஒரு விலையுயர்ந்த உருப்படியைப் போல தோன்றுகிறது. உங்கள் கணவர் செல்வந்தர். எனவே அதை அவரால் வாங்க முடியும். உங்கள் மாமியாருக்குப் பிறகு யார் இதை பயன்படுத்தப் போகிறார்கள்? "
"எனக்குத் தெரியாது. என் கணவனைத் தான் நீங்கள் கேட்க வேண்டும். அவருக்கு செலவு பற்றி கவலை இல்லை இது அவசியமாகத் தேவை பட்டது உடனே வாங்கினர் . இப்போது சக்கர நாற்காலி கவனிப்பார் அற்று ஸ்டோர்ரூமில் இருக்கிறது, அதை நடக்க முடியாத முதியோரை கவனிக்கும் இல்லம் ஒன்றுக்கு நன்கொடையாக கொடுக்கும் படி என் கணவருக்கு சொன்னேன் ஆனால் என் கணவர், அது அவருடைய தாயின் நினைவாக வீட்டில் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். அடிக்கடி அதை தூசு தட்டி அதை சுத்தப்படுத்துகிறார். "என்றாள் மாதவி
*****
ராஜாவின் மகன் கஜன் வேகமாக கார் ஓட்டுவதில் வீரன். பல கார் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்றவன் . ஒரு விலையுயர்ந்த வேகமாக ஓடும் கார்ரோன்றை ராஜா அனுக்கு வாங்கிக கொடுத்தார் . மாதவிக்கு அது விருப்மில்லை . கஜன் தன் ஒரே மகன் என்பதால் ராஜா, கஜன் கேட்டதை வாங்கிக் கொடுப்பார் தன் மகன் ஒரு வேளை வேகமாக கார் ஓட்டி விபத்தை சந்திக்கலாம் என்று. மாதவி பயந்தாள் அவள் பயந்தவாறே , கஜன் கார் விபத்துக்குள்ளானான். அவனது இரு கால்கள் மோசமாக சேதமடைந்தன, அதனால் கஜனின் இரு கால்களும் முழங்கால்களுக்கு கீழ் துண்டிக்கப் பட்டன .
கஜன் ஸ்டோரில் இருந்த தன் அப்பம்மா பாவித்த சக்கர நாற்காலியை பாவிக்க ஆரம்பித்தான். சுறுசுறுப்பான இளைஞனாக இருந்த அவன் , தன் நண்பர்களிடம் சுதந்திரமாகச் சென்று பழக முடியாது போயிற்று அது அவனுக்கு மனச்சோர்வை கொடுத்தது . ஒரு காலம் அவப் அவர் ஒரு நல்ல நடனக் கலைஞனாக இருந்தான். அவனுடன் நடனமாட பல பெண்கள் விரும்பினர். ஆனால் இப்போது அவர் பார்ட்டிகளுக்கு கஜன் போவதில்லை. அவனது இயலாமை காரணமாக அவனை ஒரு கூட்டாளிகளும் சந்திக்க வருவதில்லை . அவனது தேகநிலை பாதிப்படையத் தொடங்கியது ஏடை குறையத் தொடங்கியது
பரிசோதனைகள் பல செய்ததினால் அவனுக்கு இரத்த புற்றுநோய் என்று கண்டுபிடிக்கப் பட்டது. இது ராஜாவின் குடும்பத்துக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. . டாக்டர்கள் கஜன் ஆறு மாதங்களுக்குள் மேல் இருக்கமாட்டன் என்று சொன்னார்கள், ஐந்து மாதத்துக்குள் கஜன் காலமானான். சக்கர நாற்காலி மீண்டும் ஒரு அனாதை ஆனது. ஸ்டோருக்குச் திரும்பச் சென்றது
"மாதவி சோகமாக இருந்தாள். சக்கர நாற்காலி வீட்டிற்கு துரதிர்ஷ்டம்
ஏற்படுத்தியுள்ளது மற்றும் அதை ஒரு முடமானவர்கள் வாழும் இல்லத்துக்கு நன்கொடையாகக் கொடுக்கும் படி ராஜாவை வேண்டினாள்.. உணர்ச்சிப் பிணைப்பு காரணமாக அவர் மறுத்துவிட்டார்.
*****
"மாதவி உனக்குத் தெரியும் ஒரு நாள் எங்களுக்கு இது தேவைப்படும் என்று. நாங்கள் இப்பொது முதியவர்கள் .. இது என் அம்மா மற்றும் கஜன் நினைவாக இருக்கட்டும்” என்றார் ராஜா
மாதவி கோபமாக. "ராஜா நீர் எப்போதும் பிடிவாதமாக இருக்கிறீர். நான் இந்த சக்கர நாற்காலியை தொட்டுக் கூட பார்க்கப் போவதில்லை. இந்த சக்கர நாற்காலியில் வீட்டிலுள்ள அனைவருக்கும் பிரச்சனையை கொடுத்துக் கொண்டு இருக்கிறது என நான் நம்புகிறேன் "
"அறிவுகெட்டவளே அப்படி சொல்லாதே. அது அங்கே ஸ்டோரில் இருக்கட்டும். ஒரு நாள் நமக்கு அது தேவைப் படும்” ராஜா கோபத்தோடு சொன்னார்
*****.
குடும்ப டாக்டரிடம் மாதவி தன் முதுகெலும்பு நோவை பற்றி டாக்டரிடம் ஆலோசனை கெட்;ட போது, டாக்டர் சொன்னதைக் கேட்டு அவர்கள் கவலைப்பட்டார்கள். மருத்துவ நிபுணர் பல சோதனைகள் நடத்தினார், அதன் பின் அவர். ராஜாவிடம் "உங்கள் மனைவி எலும்புத் தேயும் நோயால் பதிகப் பட்டுள்ளார். அதை ஆங்கிலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் என்பர் இதனால் இவரின் எலும்பு அடிகடி முறியலாம் நடப்பது கஷ்டம் நோ அதிகமாக இருக்கும் பலருக்கு இதனால் இடுப்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. ஒரு சக்கர நாற்காலியை இனி இவர் பாவிப்பது நல்லது” என்றார் டாக்டர். ரரஜாவும் மாதவியும் ஒன்றுமேபேசாது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி இருந்தனர்.

******

எழுதியவர் : பொன் குலேந்திரன் -கனடா (20-Oct-17, 4:16 pm)
பார்வை : 104

மேலே