அவன்அப்பாவாக

அணுஅணுவாய் ரசித்த
மனைவியின் முதல்
வெட்க சிவப்பைவிட
கணவன் அதிகம்
ரசிக்கும் வெட்கசிவப்பு
அவள் வெட்கி வெட்கி
நாட்கள் தள்ளிப்போய்
அவன்அணு உயிரவானதை
நெளிந்து சொல்லும்
நளின நாணசிவப்பைத்தான் !

காதலோடு கீரையும்
காயும் வாங்கித்தந்து
கனிவான பார்வையோடு
கண்ணியமாய் ஒதுங்கி
தாயின் கருவறையில்
குழந்தையின் தூக்கம்
கலைக்காமல் தள்ளி
நின்று ரசித்தபடி
தன் காதலை வளர்க்கிறான்!

ஒவ்வாமையில் அவள்
உவ்வேஎன்று குமட்டி
வாந்தி எடுக்கையில்
ஒரு குழந்தையென
அவளைத் தாங்கி
முதுகை மெல்லமாக
தடவிகொடுக்கும்போது
அவன் இறுகுழந்தைகளை
சுமக்கும் தாயாகிறான் !

வளரும் அவளின்
வயிரைப் பார்த்து
சிரிக்கும் போது
திருவிழா பலூனைப்
பார்த்து சிரிக்கும்
சிறுவனாகிறான் !

அசையறாங்க என்று
மனைவி சொல்ல
அவசர அவசரமாக
ஆசையில் ஓடிவந்து
குழந்தையின் அசைவை
உணரத் துடிக்கும் அந்த
கைகள் தாய்மையின்
அரவணைப்பை விட
அழுத்தமான அணைப்பை
கொடுக்க அதுபுரியாமல்
திமிரும் குழந்தையின்
முதல் உதையில்
அன்பின் அடிமையாகிறான் !

செல்லமாக அப்பாடா
என்று குழந்தையின்
காதில் கிசுகிசுக்கும்போது
அவன் குழந்தையாகிறான்
அவள் அவனுக்கும்
அப்போது தாயாகிறாள் !

தாயை ஒரு
குழந்தையென ஒவ்வொரு
முறை மருத்துவரிடம்
அழைத்து செல்லும்போதும்
அன்பவமில்லா குழந்தையாய்
எழும் அவன் அன்பின்
சந்தேகங்கள்
குறைவதே இல்லை


பத்து மாதம்
தாய் சுமந்தாலும்
மகளையோ மகனையோ
அந்த குட்டி
பிஞ்சு உயிரை
முதன் முதலில்
தாங்கும் கைகள்
பெரும்பாலும்
பாத்து பாத்து
பூனையாய்
அங்குமிங்கும்
நடந்து நடந்து
காத்து நின்ற
தந்தையின் கைகளே!


மகளை தாங்கிய
சில்லிட்ட கையோடு
சிலிர்த்து மனைவியை
மவுனித்துப் பார்க்கும்
அந்த நொடியில்
கட்டாயம் புதிதாக
பிறக்கிறான் தந்தையாக
மட்டுமல்ல தாயுமானவனாக
ஒவ்வொரு ஆணும்

முதன் முதலாக
முழு காதலோடு
அன்று தாங்கிய
அவன் கைகளும்
கண்களும்
காலம் கடந்து
குழிவிழுந்து
நரை சுமந்து
குடுகுடு கிழவன்
ஆனாலும் அதே
காதலோடு
எப்போதும்
குழந்தையை
சுமக்கிறது
தன் மனதோடு

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (20-Oct-17, 10:48 pm)
பார்வை : 741

மேலே