கட்டழகி உன்னை கண்டு இன்றுதான் துயில் தொலைத்த இரவு இது
கன்னி உன் முகம் காணா ஏக்கத்தில்
துயில் தொலைத்த இரவுகள் பல !
கட்டழகி உன்னை கண்டு இன்றுதான்
துயில் தொலைத்த இரவு இது !
கவிதைகள் பல எழுதி வைத்தேன் !
காந்த விழிகளின் பார்வையில் சொக்கிப்போக
பல மணி நேரம் காத்திருந்தேன் !
கவிதை நாயகியே !
காதல் ராட்சசியே !
கட்டழகு பெட்டகமே !
இன்னும் சிறிது நேரத்திற்கெல்லாம் வந்து விடுவாய் !
காதல் மொழி பேசவேண்டும்
கவிதைகள் பல சொல்லவேண்டும்
கட்டழகி உன்னை பார்த்ததும் உன்னில் நான் தொலையவேண்டும் !
என் எண்ணமெல்லாம் சிறகடித்து ஏதோ ஏதோ மனம் நினைத்து
ஆசையாய் நான் காத்திருக்க !
தென்றல் அது சுகமாய் என் தேகம் வருடிய நேரம் அது
தேவதை உன் வருகையை பார்த்து -என்
மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கி வழிய !
அருகே வந்து ஆசையை இருவரும் இதழ் திறந்து
இனிதாய் பல கதை பேச வேண்டும் என
நினைத்து இருக்கும் கணத்தில் தான் !
நம் விழிகள் தான் பேசின
ஒற்றை வார்த்தை உதிர்க்கவில்லை நீயும் நானும் !
அச்சம் தவிர்த்து
வெட்கம் உடைத்து
எதிர்பாரா இன்ப முத்தம் ஒன்றை
என் இதழ்களில் பதித்து விட்டு !
வெட்கி தலைகுனிந்து
என் முகம் பார்க்க வகையின்றி
நீ நின்ற அந்த காட்சி பார்த்து !
என் இந்த இரவு முழுதும் துயில் மறந்த
இன்ப பொழுதாய் நகருதடி !
கட்டழகி உன்னை கண்டு இன்றுதான்
துயில் தொலைத்த இரவு இது !