யாரடி நீ

அன்பைத் தருபவள்
அமுதாய் இனிப்பவள்
மகிழ்வைப் பொழிபவள்
மலராய் மணப்பவள்
அவள் தான் பெண்

சிலவேளை நிலையறியாது
சீறுகிறாள் சினக்கிறாள்
கனமாய்க் கதைக்கிறாள்
கண்களால் எரிக்கிறாள்

பெண்ணே ! மனதை வருடும்
மல்லிகைச் சரமா நீ, இல்லை
நெஞ்சைக் கிழித்து நிம்மதி கெடுக்கும்
கள்ளிச் செடியா நீ
யாரடி நீ ?

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (24-Oct-17, 11:28 am)
Tanglish : yaradi nee
பார்வை : 185

மேலே