இயற்கை

நீ
வாழுமிடமெல்லாம்
வனச்சோலை தெரியுதடி

உன்னைக்கான
இரு கண்கள்
தினம்
கட்டளை இடுகிறதடி

நீ
பூத்துக்குலுங்கையிலே
மனம்
புத்துயுர் அடையுதடி

உன்
வாசம் பரவியதிலே
தென்றல்
தினம் தெருவில் ஆடுதடி

உன்னை தொட்டணைத்திட
மேகம்
கீழே இறங்குதடி

உன்
பாதம் நனைத்திட
அது நீரை பொழியுதடி

பட்டாம்பூச்சிகள் பல
உன் அழகில் பறக்குதடி

சில
பச்சோந்திகளும்
அதில் இணைய நினைக்குதடி

நீர் ஓடி வருகையிலே
மழை
நின்று பொழியுதடி

நீர் துள்ளிகுதிக்கையிலே
மீன்கள்
ஆடி பாடுதடி

கருமேகம்
வெடித்திடவே
மின்னல் பிறக்குதடி

விண்மீன்கள்
மின்னிடவே
வெண்ணிலவு சிரிக்குதடி

நீலப்பெருங்கடலின்
எல்கை தெரியுதடி
அதை
காண நினைக்கையிலே
அது நீண்டே போகுதடி…

எழுதியவர் : மகேந்திரன் (24-Oct-17, 10:13 pm)
Tanglish : iyarkai
பார்வை : 571

மேலே