இயற்கை
மேகம் கருத்திற்கும் வேளையில்
வீசுது தென்றல் காற்று
வானம் பொழிய பார்க்கிறது
விழிகள் காத்திருக்கு அதை எதிர்பார்த்து
காதோரம் கேட்கும் மெல்லிய இசைக்கு
ரீங்காரமாய் நடனமாடும் இளஞ்செடிகள்
ஜன்னல் ஓரம் நின்று ரசிக்கிறேன்,
ஆடி அசைந்து மகிழும் மரங்களை
வீசும் நறுமணம் அவள் தூறலில் நனையும் பூமியிலிருந்து
துள்ளுது உள்ளம் தானும் உடன் நனைந்திட தானே
சின்ன நீர்பறவைகள் நீச்சல் அடிக்கிறது உல்லாசமாய் நனைந்தபடி
மனதும் நிறைந்தது இயற்கையை ரசிக்கையில்
நெஞ்சமோ நெகிழ்ந்தது நிஜங்கள் அதிசயத்தில்...