மீண்டு வருவேன்

கைகொட்டி சிரித்த
கிளையை பார்த்து,

வீழ்ந்த சருகு
தரையில்
கையடித்து கர்ஜித்தது

உன்கிளையில்
இலையாகவோ,
மலராகவோ
மீண்டும் அவதரிப்பேன்
வேருக்கு
உரமாகி........

ஆனந்த் நாகராசன்
மேலவாசல்

எழுதியவர் : ஆனந்த் நாகராசன் (23-Oct-17, 8:14 pm)
பார்வை : 203

மேலே