உன் நட்பு

நட்பெனும் வரையறையில்
வரையறையில்லா நட்பு சில

அது உள்ளம் கடந்தது
உணர்வை பகிர்ந்தது

எதிர்பாராது ஆனால்
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்

தட்டிக் கேக்கும் அதே
சமயம் தாங்கிப்பிடிக்கும்

விட்டுக்கொடுத்தும்
விட்டுக்கொடுத்திடாமலும்
வாழ்ந்திடும்

துவண்டு போக விடாது
துவண்டபோதும் விடாது
மீட்டெடுக்கும்

தோள் கொடுக்கும்
தோள் சாயும்
உரிமை கொள்ளும்
எந்நிலையிலும்....

இவையனைத்தும் ஒருசேர
உன்னில் கண்டேன் இன்று போல்
என்றும் இணைந்திருப்போம் இனிய நட்போடு...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்புத்தோழியே.....

எழுதியவர் : சே.இனியன் (25-Oct-17, 10:06 am)
Tanglish : un natpu
பார்வை : 553

மேலே