என்னவள்
தேடி தேடி பார்க்கிறேன்
எனக்கான தேவதையை
இன்னும் காணவில்லை...
அவள் முகம்
சாந்தமும் கருணையும்
கலந்து புன்னகை வீச வேண்டும்...
அவள் பார்வை
நந்தவனத்து தென்றல்
போல் குளிர்ந்திருக்க வேண்டும்...
அவள் கார்குழல் காற்றில் அசைந்தாடி எனை நலமா நலமா
என்று விசாரிக்க வேண்டும்...
அவள் சின்ன
நெற்றிப்பொட்டு
என் விரல்களோடு
நட்பு கொள்ளவேண்டும்...
அவள் எண்ணங்கள்
என்னையே
சுற்றிவர வேண்டும்
அவளின் விரல்கள் பந்துகளை
தழுவிக்கொள்ள வேண்டும்...
இவளைதான் தேடுகிறேன்
என்று தோன்றுவளோ என் கண்ணெதிரே...