அவர் வேலையை நாம செய்ய வேணாங்க
நம்மை படித்த அந்த ஆண்வடவன் மூன்று முக்கியமான தொழில்களை செய்து வருகிறான்.
ஓன்று ஆக்கல், இரண்டாவது காத்தல். மூன்றாவது அழித்தல் இதை எல்லா மதத்தினரும் ஒத்து
கொண்டு இருக்கிறார்கள்.
மனிதர்களை மட்டும் இல்லாமல். பல ஜீவ ராசிகளை அவன் படைத்தது வைத்துக் கொண்டு
இருக்கிறான்.
காட்டில் வாழும் பலம் பொருந்திய மிருங்களான,புலி,சிறுத்தை கரடி,நரி போனற மிருகங்கள்
எல்லாம் பலம் கொஞ்சம் குறைவான ஓடிப் போய் கொன்று அவைகளுக்கு உணவு ஆக்கிக்
கொள்கின்றன.
பூனை,வேகமாக ஓடி எதிரில் வந்த எலியை பிடித்து உணவு ஆக்கி வருகிறது.பல்லி ஓடி போய்
பூச்சிகளை பிடித்து உணவு ஆக்கி வருகிறது.
பாம்பு எங்கோ பார்த்து கொண்டு இருக்கும் தவளையை ஓடி போய் கவ்வி பிடித்து தனக்கு உணவு
ஆக்கி வாழ்ந்து வந்து கொண்டு இருக்கிறது.
இதை போல பல உதாரணங்கள் கொடுத்து கொண்டே போகலாம்.
மனிதன் காட்டில் வாழும் மான்,அணில்,காட்டு பன்றி புறா போன்ற ஜீவ ராசிகளை வேட்டை ஆடி
தனக்கு உணவு ஆக்கிக் கொள்கிறான்.
வீட்டில் அவன் ஆடு,கோழி,வாத்து மாடு மீன் இவைகளை கொன்று தன் சாப்பாட்டிற்கு சுவையான
உணவுகளை செய்து உறவினர்களுடன் சந்தோஷமாக சாப்பிட்டு வருகிறான்..
ஒரு அறுபது வருஷங்ககுக்கு முன்பு இல்லாத ஒரு புது கொடுமை இப்போது நடந்து வருவதை
நினைத்து மனம் ரொம்ப வேதனைப் படுகிறது.
கோவத்திலோ இல்லை வேறு காரணத்தினாலோ கணவன் தன் மனைவியை கொல்வது, அதே
போல ஒரு மனைவி எதோ காரணத்துக்காக தன் கணவனை கொல்வது,சொத்து விவகாரத்தினால்
ஒரு அண்ணன் தன் தம்பியை கொல்வது,பெத்தவர்கள் எதோ காரணத்துக்காக தங்களுக்கு பிறந்த
பிள்ளையையோ பெண்ணையோ கொல்வது,காதல் விவகாரத்தினால் ஒரு காதலன் தன்
காதலியையோ, ஒரு காதலி அவள் காதலனையோ கொல்வது, நில தகராறு, வரப்பு
தகராறு காரணமாக ஒரு விவசாயி மற்றோரு விவசாயியை கொல்வது,பணத் தகராறு காரணமாக
ஒரு நண்பனை மற்ற ஒரு நண்பன் கொல்வது,அரசியல் காரணத்துக்காக ஒரு அரசியல் வாதி
மற்றோரு அரசியல்வாதியை கொல்வது, இல்லை ஒரு தனவந்தர் கொலையாளி கூட்டத்
தலைவனுக்கு பணம் கொடுத்து இன்னொரு நபரை கொல்வது, போலீஸ் en counter death என்கிற
காரணத்தை வைத்து ஒருவரை கொல்வது, இன்னும் இதை போன்ற பல கொலைகளை நடந்து
வருவதை நாம் பத்த்ரிக்கைகளிலும், T.V செய்திகளிலும் படித்துக் கேட்டும் வருகிறோம்.
பலமுள்ள ஜீவ ராசிகள், சற்று பலம் குறைந்த ஜீவ ராசிகளை கொன்றும்,மனிதன் பல
பண்டிகைகளுக்கும்,விசேஷ தினங்களிலும், சுவையான உணவு தயாரிச்சு சாப்பிட்டு வரவும்
ஆண்டவன் படைத்த ஜீவ ராசிகளை கொன்று வருவதும் எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒரு விஷயம்.
இந்த வழக்கம் பல யுகங்களாக நடந்து வரும் வழக்கம்.இதனால் நாம் அந்த ஆண்டவன் செய்ய
வேண்டிய ஒரு தொழிலை கொஞ்சம் கொஞ்சம் குறைத்து வந்துகே கொண்டு இருக்கிறோம்.
இது போதும்ங்க!!!!
அவர் எந்த ஆணையோ,பெண்ணையோ கொன்று அவர் வேலையை இன்னும் குறைக்க உங்களை
கேக்கலீங்க!!!! இதை அந்த ஆண்டவன் கேக்கலீங்க!!!!!
ஒரு ஆண் மகன், இன்னொரு ஆண் மகனையோ கொன்றோ ஒரு பெண் இன்னொரு பெண்ணை
கொன்றோ, ஒரு தந்தை தாய் அவர்கள் பெற்ற குழந்தைகளை கொன்றோ,ஒரு நண்பன் இன்னொரு
நண்பனை கொன்றோ,ஒரு விவசாயி இன்னொரு விவசாயியை கொன்றோ, ஒரு அரசியல்வாதி
இன்னொரு அரசியல் வாந்தியை கொன்றோ போலீஸ் encounter இலை ஒருவரை கொன்றோ, பணம்
வாங்கி கொண்டு ஒருவரை கொன்றோ அந்த ஆண்டவன் வேலையை நாம குறைக்க வேணாங்க!!!.
அவர் கணக்கு படி ஒரு ஒரு ஆணோ. ஒரு பெண்ணோ எப்போது இறக்க வேணுமோ அப்போது அவரே
அந்த ""அழித்தல்"" வேலையை செய்யட்டுங்க!!!!
நாம செய்ய வேணாங்க!!!!!