பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த சுந்தரர் தேவாரம்----முடிப்பதுகங்கை ---------------பண் - கொல்லிக்கௌவாணம்
இறைவர் கோயில் மணி முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி எதிர்புக்கு
நிறையும் காதல் உடன் வீழ்ந்து பணிந்து நேர் நின்று ஆரூரர்
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்துப்
பிறை கொள் முடியார் தமைப்பாடி பரவிப் பெருமாளுடன் தொழுதார்
முடிப்பது கங்கையுந் திங்களுஞ் செற்றது மூவெயில்
நொடிப்பது மாத்திரை நீறெ ழக்கணை நூறினார்
கடிப்பது மேறுமென் றஞ்சு வன்றிருக் கைகளாற்
பிடிப்பது பாம்பன்றி ஆல்லை யோவெம் பிரானுக்கே
திருச்சிற்றம்பலம்
.